'சூப்பர் டீலக்ஸ்'க்கு பிறகு தியாகராஜன் குமாரரராஜாவின் அடுத்த படம் பற்றிய தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், ரம்யாகிருஷ்ணன், சமந்தா, மிஷ்கின் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த படம் 'சூப்பர் டீலக்ஸ்'.

Thiagarajan Kumararaja to direct Vijay Sethupathi and Samantha's Super Deluxe in Hindi

கடந்த மார்ச் 29 ஆம் தேதி வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்துக்கு பிஎஸ் வினோத், நீரவ் ஷா ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருந்தனர்.

மேலும் இந்த படத்துக்கு மிஷ்கின், நலன் குமாரசாமி, நீலன் கே.சேகர் கூடுதலாக இந்த படத்துக்கு திரைக்கதை அமைத்திருந்தனர். இந்த படத்தின் இணையதள வெளியீட்டு உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை தியாகராஜன் குமாரராஜாவே ஹிந்தியிலும் இயக்கவிருக்கிறாராம்.  மேலும் இந்த படத்தை ஒரு முன்னணி படத் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதாம்.