நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைந்து நடித்துள்ள ‘கொலைகாரன்’ திரைப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Vijay antony's Kolaigaran all set to release on June 5th as a Ramzan special Vijay antony's Kolaigaran all set to release on June 5th as a Ramzan special](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/vijay-antonys-kolaigaran-all-set-to-release-on-june-5th-as-a-ramzan-special-photos-pictures-stills.jpg)
க்ரைம்-த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை தியா மூவிஸ் சார்பாக பிரதீப் தயாரித்துள்ளார். ஆண்ட்ரூவ் லூயிஸ் இயக்கும் இப்படத்தின் மிரட்டலான டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றது.
விசாரணை அதிகாரி வேடத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுனும், சீரியல் கொலைக்கும் அஞ்சாத கெத்தான கொலைகாரன் வேடத்தில் விஜய் ஆண்டனியும் இணைந்துள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘கொலைகாரன்’ திரைப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜூன்.5ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக படக்குழு வெளியிடுள்ள வித்தியாசமான ரிலீஸ் தேதி அறிவிப்பு புரொமோ படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
நடிகர்கள் நாசர், சீதா, பகவதி பெருமாள், கவுதம், சதீஷ், சம்பத் ராம், ஆஷிம நர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு சைமன் கே.கிங் இசையமைத்துள்ளார். விரைவில் இசை வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
#KolaigaranReleaseDate ... is here@vijayantony @akarjunofficial @Dhananjayang pic.twitter.com/ENjmSGBcll
— Behindwoods (@behindwoods) May 3, 2019