www.garudabazaar.com

பிரேமம் புகழ் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் 'GOLD'.. ரிலீஸ் எப்போ? வெளியான மாஸான தகவல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் தயாராகிவரும் கோல்டு திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Alphonse Puthren GOLD Movie releasing date announced

Also Read | "அவர் கத்துக்கொடுத்த பாடம்..".. மகேஷ்பாபுவின் தந்தை மறைவுக்கு இயக்குனர் SS.ராஜமௌலி உருக்கம்..!

தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான “நேரம்” என்ற படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்.

2015 ஆம் ஆண்டு வெளியாகி மலையாள திரையுலகில் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டாக அமைந்த ‘பிரேமம்’ படத்தை கடைசியாக அல்போன்ஸ் புத்ரன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக, சாய்பல்லவி, மடோனா செபாஸ்டியன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார்.

Alphonse Puthren GOLD Movie releasing date announced

அல்போன்ஸ் புத்ரன் பிரேமம் படத்தை தொடர்ந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு முதல் திரைப்படமாக கோல்டு படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ஹீரோவாக பிரித்விராஜ் நடித்துள்ளார். பிரித்விராஜூக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். Gold படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அல்போன்ஸ் அண்மையில் வெளியிட்டார். இந்த போஸ்டர் முழுக்க, பிரித்விராஜ், நயன்தாரா ஆகியோருடன் படத்தில் நடித்த 40க்கும்  மேற்பட்ட நடிகர், நடிகைகளும் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, மல்லிகா சுகுமாரன், லால் அலெக்ஸ், ஜெகதீஷ்,  பாபு ராஜ், வினய் ஃபோர்ட் என ஏராளமான நடிகர்கள் Gold படத்தில் நடித்துள்ளனர்.

Alphonse Puthren GOLD Movie releasing date announced

முன்னதாக இந்த படம் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பட வேலைகள் முடிவடையாததால் ரிலீஸ் தாமதமானது. இந்நிலையில், கோல்டு திரைப்படம் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை வலிமை படத்தின் கோயம்புத்தூர் ஏரியா வினியோகஸ்தரான SSI புரொடக்ஷன்ஸ் சுப்பையா கைப்பற்றி உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மாநாடு படத்தை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.

Alphonse Puthren GOLD Movie releasing date announced

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அல்போன்ஸ் புத்ரனின் கோல்டு திரைப்படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

தொடர்புடைய இணைப்புகள்

Alphonse Puthren GOLD Movie releasing date announced

People looking for online information on Alphonse Putharen, Gold Movie, GOLD Movie Release Update will find this news story useful.