Maha others
Nadhi others
www.garudabazaar.com

மாமனிதன் பட சார்பில் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம்.. ஆஹாவும், விஜய் சேதுபதியும்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கி வரும் ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஜூலை 15ஆம் தேதி முதல் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' வெளியாகி, குறுகிய காலகட்டத்திற்குள் பத்து மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனைப் படைத்திருக்கிறது.

maamanithan vijay sethupathi aha helps school student fees

இந்நிலையில் ‘மாமனிதன்’ படத்தில் எளிய மனிதர்களின் பிள்ளைகள் தனியார் கல்வி நிறுவனத்தில் தரமான கல்வியைப் பெறவேண்டும் என்பது மையமாக இடம்பெற்றிருக்கும். இதனை ஆஹா டிஜிட்டல் குழுமமும் மனமுவந்து முன்மொழிந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய ஐந்து மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து, அவர்கள் கல்வி கற்பதற்காக, ஓராண்டு கல்விக்கட்டணத்தை நன்கொடையாக வழங்குகிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வழங்கியிருக்கிறார்.

maamanithan vijay sethupathi aha helps school student fees

இதேபோல் ஆடி தள்ளுபடி திட்டத்தை, ஆஹா டிஜிட்டல் தளமும் வழங்குகிறது. மூன்று மாத சந்தா தொகையான 149 ரூபாய்க்கு பதிலாக, ஆடி மாதத்தில் ரூ 99/- மட்டும் செலுத்தி, கட்டணச் சலுகையைப் பெறலாம். அனைத்து வகையான ஆஹா ஒரிஜினல்ஸ் மற்றும் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் திரைப்படங்களையும், நிகழ்ச்சிகளையும், வலைதளத் தொடர்களையும் கண்டு ரசிக்கலாம். இந்த அரிய வாய்ப்பை புதிய சந்தாதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

maamanithan vijay sethupathi aha helps school student fees

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'மாமனிதன்', நம் மண்ணின் வாழும் எளிய மனிதர்களின் யதார்த்த வாழ்வியல் பதிவு என்பதும், இதனை இயக்குநர் சீனு ராமசாமி, தனக்கே உரிய பாணியில் இயக்கி, ரசிகர்களை உணர்ச்சிவசப்பட செய்திருக்கிறார் என்பதும் உண்மை. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கும் விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' திரைப்படத்தை ஜூலை 15ஆம் தேதி முதல் ஆஹா டிஜிட்டல் தளத்தில் கண்டு ரசிக்கலாம்.

maamanithan vijay sethupathi aha helps school student fees

மேலும் ஆஹா டிஜ்ட்டல் தளத்தில் ‘இரை’, ஆகாஷ்வாணி’, ‘அம்முச்சி -2’,‘குத்துக்கு பத்து’,‘ஆன்யா‘ஸ் டுடோரியல்’ஆகிய வலைத்தளத் தொடர்களுடன், விரைவில் ‘ஈமோஜி’ எனும் புதிய வலைத்தளத் தொடரும் வெளியாகிறது. ‘பயணிகள் கவனிக்கவும்’, ‘போத்தனூர் தபால் நிலையம்’ போன்ற ஆஹா ஒரிஜினல்ஸ் படைப்புகளும், சபாபதி, செல்ஃபி, ரைட்டர், மன்மத லீலை, ‘ஐங்கரன்’, ‘கூகுள் குட்டப்பா’, ‘கதிர்’, ‘மாமனிதன்’ உள்ளிட்ட பல  திரைப்படங்களும் ஆஹாவில் வெளியாகியிருக்கிறது.

maamanithan vijay sethupathi aha helps school student fees

maamanithan vijay sethupathi aha helps school student fees

Also Read | சூரரைப் போற்றுக்கு 5 தேசிய விருது.. "ஊர்வசிக்கும் கெடச்சிருக்கணும்" - பிரபல நடிகை ட்வீட்..

தொடர்புடைய இணைப்புகள்

maamanithan vijay sethupathi aha helps school student fees

People looking for online information on Aha Tamil, Maamanithan, Vijay Sethupathi will find this news story useful.