Maha others
Nadhi others
www.garudabazaar.com

BREAKING: ரஜினி - நெல்சன் இணையும் 'ஜெயிலர்'.. டெஸ்ட் ஷூட்டில் மாஸ் சம்பவம்! GLIMPSE வீடியோ ரிலீஸ் எப்போ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : ரஜினிகாந்த் - நெல்சன் இணையும் புதிய படத்தின் BREAKING அப்டேட் கிடைத்துள்ளது.

Superstar Jailer Test Shoot completed at Sun TV Studio

கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படம் கடந்த ஆண்டு (04.11..2021) தீபாவளியை முன்னிட்டு வெளியானது.

இந்த படத்தில் லிவிங்ஸ்டன், பாண்டியராஜன், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்து இருந்தனர்.

இந்த 'அண்ணாத்த' படம் கலவையான விமர்சனகளைப் பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் ஹிட் ஆனது. தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

Superstar Jailer Test Shoot completed at Sun TV Studio

அதைத்தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த 169 வது படத்தை இயக்கும் வாய்ப்பு கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சனுக்கு கிடைத்தது. இந்த படத்தையும் எந்திரன், பேட்ட, அண்ணாத்த படங்களை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.

இதில், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, கலை இயக்குனர் கிரண், உடையலங்காரம் - பல்லவி ஆகியோர் பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

சில நாட்களுக்கு முன் இப்படத்தின் டைட்டில் லுக் வெளியானது. டைட்டில் ரத்தம் தோய்ந்த கத்தி பெரிய சங்கிலியால் கட்டப்பட்டு போஸ்டரில் இடம் பெற்றது. வெளிர் மஞ்சள் நிறத்தில் டைட்டில் அமைந்துள்ளது.

Superstar Jailer Test Shoot completed at Sun TV Studio

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதியில் இருந்து தொடங்க உள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கான் வெள்ளோட்ட படப்பிடிப்பு சென்னை சன் டிவி ஸ்டூடியோவில் சில தினங்களுக்கு முன் நடந்ததாகவும், அதில் ரஜினிகாந்த் மற்றும் சில நடிகர்கள் பங்கெடுத்ததாகவும் தெரிகிறது. மேலும் கதாபாத்திரங்கள் வெட்டுக்கத்தி மற்றும் கத்திகளுடம் போஸ் கொடுத்ததாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Superstar Jailer Test Shoot completed at Sun TV Studio

ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதியில் இருந்து தொடங்க உள்ள படப்பிடிப்புக்கு முன்னதாகவே படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

தொடர்புடைய இணைப்புகள்

Superstar Jailer Test Shoot completed at Sun TV Studio

People looking for online information on Jailer, Nelson, Rajinikanth, Sun pictures, Sun TV will find this news story useful.