பிக் பாஸ் 3-ல் Cute Moments - திக்குமுக்காடிய Losliya Army

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. முதல் இரண்டு சீசன்கள் வெற்றி பெற்றதையடுத்து, மூன்றாவது சீசன் கடந்த வாரம் முதல் ஆரம்பமானது. 16 போட்டியாளர்களை கொண்ட இந்நிகழ்ச்சியில் இளம் பெண் போட்டியாளர்கள் அதிகம் உள்ளனர்.

Losliya's cute moments from Bigg boss Tamil 3, July 1 episode

அவர்களில் இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லொஸ்லியா முதல் சில நாட்களிலேயே மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார். ஓரிரு நாட்களிலேயே லொஸ்லியாவிற்கு ஆர்மி உருவாக்கி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் லொஸ்லியா செய்யும் சிறிய விஷயங்களையும் லொஸ்லியா ஆர்மியினர் கொண்டாடி வருகின்றனர். நேற்றைய எபிசோடில் நடந்த நாய் கெட்டப்பில் லொஸ்லியாவின் Cute Moments அவரது ஆர்மியினரை திக்குமுக்காடச் செய்தது. நேற்றைய எபிசொட்டில் எவிக்‌ஷனுக்காக ஒவ்வொரு போட்டியாளரும் மற்ற 2 போட்டியாளர்களை நாமினேட் செய்தனர். இந்த எவிக்‌ஷன் நாமினேஷன் ஒருவழியாக போக, எபிசோட்டை கலகலப்பாக்க பிக் பாஸ் ஒரு Fun டாஸ்க் ஒன்றை அறிவித்தார்.

ரெண்டு ரெட் பாக்ஸ் நடுவில் ஒரு எலும்பு துண்டை வைத்து, நாய் மாதிரி மேக்-அப் போட்டு ஒருத்தர் பிடிக்கறதுக்குள்ள எலும்புத் துண்டை எடுக்குறது தான் டாஸ்க். இந்த டாஸ்கிற்காக போட்டியாளர்கள் அனைவரும் வித்தியாச வித்தியாசமாக நாய் கெட்-அப் போட்டனர். அதிலும் வழக்கம் போல லொஸ்லியா தான் ரசிகர்களை ஈர்த்தார்.

முகம் முழுவதும் ஹார்ட்டின் வரைந்து இந்த ஹார்ட் மொத்தமும் பிக் பாஸிற்கு தான் என கூறினார். லொஸ்லியா மேக்-அப் போட்டு முடிக்கும் வரை ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

பிக் பாஸ் 3-ல் CUTE MOMENTS - திக்குமுக்காடிய LOSLIYA ARMY வீடியோ