உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர்,என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.

தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்த நடிகை ஸ்ருதி ஹாசன். சிறு வயது முதலே தான் ஒரு பாப் பாடகர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருப்பவர். அதன் எதிரொலியாக தனது 6 வயதிலே தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் ஸ்ருதி.
சமீபநாட்களாக படவாய்ப்புகள் ஏதுமின்றி வந்த ஸ்ருதிஹாசன் இதற்கிடையில் காதல் வலையில் விழ சில காலம் ஜாலியாக உலா வந்துகொண்டிருந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமீபத்தில் திடீரென தங்கள் காதல் முறிந்துவிட்டதாக சமூகவலைத்தளங்களில் தெரிவித்தார்
காதல் முறிவுக்கு பின்னர் கேரியரில் அதீத கவனத்தை செலுத்தி வரும் ஸ்ருதிஹாசனிடம் ரசிகர் ஒருவர் உங்களது திருமணம் எப்போது? திருமணத்தின் போது எங்களுக்கு அழைப்பு விடுத்தால் நாங்கள் அனைவரும் கலந்துகொள்வோம் என்று ட்விட்டரில் கூறியிருந்தார்
இதற்கு ஸ்ருதிஹாசன், "என் திருமணத்துக்கு நீங்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். அதற்கு முன்னர் என்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வாருங்கள். நாம் சேர்ந்து கொண்டாடுவோம்” என்று பதிலளித்திருந்தார்.
You’ll be waiting a VERY long time 😂 so let’s do a birthday together instead lol https://t.co/5wgmNIOLc1
— shruti haasan (@shrutihaasan) July 1, 2019