பிக் பாஸ் வீட்டில் 5 பேரை காதலித்த கவின்! தலைப்புச் செய்திகள் வாசிப்பது யார் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடிற்கான 3வது புரொமோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Tamil 3 Promo- Losliya's cutest ever news reading episode in Bigg Boss House

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதி நாளான இன்று உலகநாயகன் கமல்ஹாசன் கலந்துக் கொள்கிறார். 16 போட்டியாளர்களை கொண்ட இந்நிகழ்ச்சியில் ஒரு வாரம் நிறைவடைந்துள்ளது. இந்த ஒரு வாரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் பல்வேறு சண்டை சச்சரவுகள் இருந்தாலும், உருக்கமான, சந்தோஷமான , ஆறுதலான பல விஷயங்கள் நடந்தேறியுள்ளது.

அதனை அலசி ஆராய்ந்து வரும் இந்த வேளையில், பிக் பாஸ் வீட்டிற்குள் தமிழ் பொண்ணு, கலாச்சாரம் என அனைத்து சீசன்களிலும் நடக்கும் சம்பவங்களும் நடந்தேறியுள்ளது. இது தொடர்பான புரொமோ வீடியோக்கள் வெளியாகின.

தற்போது அதைத் தொடர்ந்து, ஜெட் ஸ்பீடில் ஆர்மி உருவாகும் அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்த, இலங்கை செய்தி வாசிப்பாளர் லொஸ்லியா, பிக் பாஸ் வீட்டில் காதல் மன்னனாக வலம் வந்த நடிகர் கவின், 5 பேரை காதலித்து கடைசி வரை யாரை கைப்பிடித்துக் கொண்டு போகப்போகிறார் என்பது தெரியவில்ல, மீரா அவர்கள் பாத்திரம் கழுவும் இடத்தில் நடந்த பல குலறுபடிகள், வரும் வாரம் புதிய வாரமாக அமையும் என வாழ்த்தி தனது செய்தியை நிறைவு செய்தார்.

பிக் பாஸ் வீட்டில் 5 பேரை காதலித்த கவின்! தலைப்புச் செய்திகள் வாசிப்பது யார் தெரியுமா? வீடியோ