பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இருவாரங்களாக காதல், மோதல், சிறுசிறு உரசல்கள் என பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. கடந்த வாரம் எலிமினேசன் இல்லாததால் போட்டியாளர்கள் கவலையில்லாமல் இருந்தனர்.

இதனையடுத்து அடுத்த வாரம் எலிமினேஷன் இருக்கும் என கமல்ஹாசன் தெரிவித்தார். இதனையடுத்து திங்கள்கிழமை போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யத் தொடங்கினர்.
ஒவ்வொரு போட்டியாளரும் இருவரை நாமினேட் செய்யலாம். கடந்த வார தலைவர் வனிதா விஜயகுமாரையும், இந்த வார தலைவர் மோகன் வைத்தியாவையும் நாமினேட் செய்யக் கூடாது என்று விதிமுறை விதிக்கப்பட்டிருந்தது.
இதில் மதுமிதா, கவின் மற்றும் பாத்திமா பாபுவை நாமினேட் செய்தார். அபிராமி, மதுமிதாவையும், மீராவையும் நாமினேட் செய்தார். ஷெரின், மதுமிதா மற்றும் மீராவையும், கவிண், மதுமிதா மற்றும் மீராவையும், மீரா, அபிராமி மற்றும் சாக்ஷியையும் நாமினேட் செய்தார்கள்.
மேலும் பாத்திமா, கவிண் மற்றும் சரவணனையும், வனிதா - சேரன் மற்றும் மீராவையும், தர்ஷன் - சாக்ஷி மற்றும் மீராவையும், லோஸ்லியா - மீரா மற்றும் சரவணனையும், ரேஷ்மா - மதுமிதா மற்றும் பாத்திமா பாபுவையும் நாமினேட் செய்தனர்.
மேலும் சரவணன் - சேரன் மற்றும் பாத்திமாவையும், சேரன் - தர்ஷன் லோஷ்லியாவையும் முகென் - சேரன் மற்றும் மீராவையும், மோகன் வைத்தியா சேரன் மற்றும் பாத்திமா பாபுவையும் நாமினேட் செய்தனர்.
இதனையடுத்து பிக்பாஸ் நாமினேட் செய்யப்பட்டவர்கள் பட்டியலை சொன்னது. அதில் கவின், சாக்ஷி, சரவணன், பாத்திமா பாபு, சேரன், மீரா, மதுமிதா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இதில், மீரா மிதுன் அதிகபட்சமாக 8 ஓட்டுக்களையும் மதுமிதா 6 ஓட்டுக்களையும் பெற்றுள்ளார்கள். இதனால் இருவரில் யார் முதலில் வெளியேறுவார்கள் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.