பிக் பாஸ் தீவிர ரசிகனோட Crush யாருன்னு தெரியுமா? - சதீஷின் Viral Video

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ள ஒரு போட்டியாளரை வயதான ரசிகர் ஒருவர் தனது Crush என கூறிய வீடியோவை நடிகர் சதீஷ் பகிர்ந்துள்ளார்.

Actor Sathish shares a aged diehard fan video saying, Bigg Boss Losliya is his recent crush

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. முதல் இரண்டு சீசன்கள் வெற்றி பெற்றதையடுத்து, மூன்றாவது சீசன் கடந்த வாரம் முதல் ஆரம்பமானது. 16 போட்டியாளர்களை கொண்ட இந்நிகழ்ச்சியில் இளம் பெண் போட்டியாளர்கள் அதிகம் உள்ளனர்.

அவர்களில் இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லொஸ்லியா முதல் சில நாட்களிலேயே மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார். ஓரிரு நாட்களிலேயே லொஸ்லியாவிற்கு ஆர்மி உருவாக்கி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காமெடி நடிகர் சதீஷ் கடந்த சீசன்களை பார்த்து பங்கமாக கலாய்த்து ட்வீட் செய்த நிலையில், தற்போது அவர் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் தீவிர ரசிகரான முதியவர் ஒருவரிடம் சதீஷ், ‘தாத்தா உங்க Crush யாரு? பத்மினியா? அஞ்சலி தேவியா? என்றதற்கு லொஸ்லியா’ என கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் தீவிர ரசிகனோட CRUSH யாருன்னு தெரியுமா? - சதீஷின் VIRAL VIDEO வீடியோ