''ரொம்ப அழகா இருக்கா .... கிழி கிழி கிழி'' - பிக்பாஸில் லோஸ்லியா, தர்ஷன் குறித்து கலா மாஸ்டர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 3 தொடங்கி கடந்த இருவாரங்களாக காதல், மோதல், சிறுசிறு உரசல்கள் என பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் அவர்கள் நடவடிக்கைகளுக்கு ஏற்ப ரசிகர்களின் ஆதரவையும், எதிர்ப்பையும் பெற்று வருகின்றனர்.

Kala Master speaks about Losliya and Dharshan in Bigg Boss 3

இந்நிலையில் பிரபல நடன இயக்குநர் கலா, தனது சிஷ்யனான சாண்டி குறித்த அனுபவங்களை Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ''கமலிடம் நான் இந்த அளவுக்கு வளர்ந்ததற்கு கலா அக்கா தான் காரணம் என்று சாண்டி சொன்னான். அவன் வந்த வழிய மறக்கல.

ரொம்ப ஜாலியா, கூலா இருப்பான். என் கூட 15 வருஷமா இருந்த பசங்க. இப்போ பிக்பாஸ்ல நல்ல விளையாண்டுட்டு இருக்கான். அவன் என்கிட்ட பிரச்சன என்னனா ? நிறைய கிண்டல் பண்ணுவான்.

எனக்கு இலங்கைத் தமிழர்கள் ரொம்ப நெருக்கம். கனடாவில் என்னோட டான்ஸ் கிளாஸ் இருக்கறதுனால. அவங்கள மாதிரி அன்பு பாசம் கொடுக்கிறதுல யாரும் கிடையாது. லோஸ்லியா ரொம்ப அழகா இருக்கா. அவங்க அப்பா கனடானு சொன்ன உடனே அவங்க அட்ரஸ் கிடச்சா பார்த்து பேசுவனேனு சொன்னேன்'' என்றார்.

''ரொம்ப அழகா இருக்கா .... கிழி கிழி கிழி'' - பிக்பாஸில் லோஸ்லியா, தர்ஷன் குறித்து கலா மாஸ்டர் வீடியோ