பிக்பாஸில் கலந்துகொள்கிறேனா ? - நடிகை லைலா விளக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை லைலா 'தீனா', 'கண்டநாள் முதல்', 'பிதாமகன்' உள்ளிட்ட படங்களில் தனது வெகுளித்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். அவர் தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு 'அலைஸ்' எனும் படத்தில் ரைஸாவுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, மணி சந்துரு இந்த படத்தை இயக்குகிறார்.

Laila Clarifies Actor Kamal Haasan's Bigg Boss 3 Controversy

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீஸன் 1 மற்றும் சீசன் 2 நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் போது பங்கேற்பாளர்களின் ஒவ்வொரு செயலும் சமூக வலைதளங்களில் விவாதப்பொருளானது.

தற்போது மூன்றாவது சீஸன் தொடங்குவதாகவும் அதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியானதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. மேலும் ஒரு சில பிரபலங்களை குறிப்பிட்டு அவர்கள் பிக்பாஸில் கலந்துகொள்ளவிருப்பதாகவும் கூறப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக நடிகை லைலாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து நடிகை லைலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போவதாக வெளியான செய்தியை மிகக் கடுமையாக மறுத்துள்ளார்.