''பாகுபலிக்கு முன்னாடி மருதநாயகம் வந்திருந்தா...'' - கமலின் வெறித்தனமான பாகிஸ்தான் ரசிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசனின் படங்கள் உலக அளவில் பிரபலமானவை என்பதற்கு சான்றாக பாகிஸ்தான் ரசிகர் ஒருவரின் ட்வீட் அமைந்துள்ளது.

Kamal Haasan's Pakistan fan compared to Baahubali and Marudhanayagam

பாகிஸ்தானை சேர்ந்த கமலின் அதிதீவிர ரசிகரான கரண் குமார் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பாகுபலி'க்கு முன்பாக கமல்ஹாசனின் 'மருதநாயகம்' வெளியாகியிருக்க வேண்டும் என எண்ணுகிறேன். அப்படி வெளியாகியிருந்தால் உலகத்துக்கு மிகவும் சிறப்பான தயாரிப்பு, நடிப்பு, கதை ஆகியவை பற்றி தெரிந்திருக்கும் என்று கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து கமல்ஹாசனை போன்று சிறந்த நடிகர் மற்றும் கலைஞர் பாலிவுட்டில் இல்லை. என்று குறிப்பிட்டு ஒரு பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் கமல்ஹாசன் குறித்து பல்வேறு ட்வீட்களை அவர் செய்துள்ளார்.  குறிப்பாக கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடர்பாகவும் அவர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.