பிக்பாஸில் கலந்துகொள்ள போகிறாரா 'சூது கவ்வும்' நடிகர் ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீஸன் 1 மற்றும் சீசன் 2 நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் போது பங்கேற்பாளர்களின் ஒவ்வொரு செயலும் சமூக வலைதளங்களில் விவாதப்பொருளானது.

Ramesh Thilak denied rumours about Kamal Haasan's Biggboss 3

'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' என கமல்ஹாசனின் ஸ்டைலான மேனரிசமும்,  ஒவ்வொரு பிரச்சனைகளையும் முதிர்ச்சியாக கையாண்ட விதமும் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது.

தற்போது மூன்றாவது சீஸன் தொடங்குவதாகவும் அதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியானதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. மேலும் ஒரு சில பிரபலங்களை குறிப்பிட்டு அவர்கள் பிக்பாஸில் கலந்துகொள்ளவிருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் 'சூது கவ்வும்', 'காக்கா முட்டை', 'ஒருநாள் கூத்து' உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் ரமேஷ் திலக் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்பட்டது. இதனையடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.  அதில், 'நான் பிக்பாஸில் கலந்துகொள்ளவிருப்பதாக வெளியான செய்திகள் பொய்யானவை. நான் பிக்பாஸில் கலந்துகொள்ளப் போவதில்லை' என உறுதிபடத் தெரிவித்தார்.