தனுஷ் நடிக்க வந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டது.

துள்ளுவதோ இளமை படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஆனவர் தனுஷ். அந்த படத்தின் ஷூட்டிங்கின்போது தன்னை பார்த்தவர்கள் இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவாக நடிக்க வந்துவிட்டது என்று கிண்டல் செய்ததாக தனுஷ் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், பாடகர் என்று பன்முகத் திறமை கொண்டவராக உள்ளார். ப. பாண்டி படத்தை பார்த்தவர்கள் அனைவரும் இது இயக்குநர் தனுஷின் முதல் படம் போன்றே இல்லை என்று பாராட்டினார்கள்.
அவர் நடித்த துள்ளுவதோ இளமை ரிலீஸாகி இன்றுடன் 17 ஆண்டுகள் ஆகிறது. நான் நடிக்க வந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டதா, நேற்று தான் அந்த படம் ரிலீஸானது போன்று இருக்கிறது என்று தனுஷ் ஃபீல் பண்ணி ட்வீட் போட்டுள்ளார்.
கோலிவுட்டை விடுங்க பாடியை காட்டி மிரட்டும் பாலிவுட்காரர்களையே தனது நடிப்பால் மிரள வைத்துவிட்டு வந்தவர் தனுஷ். மேலும் ஹாலிவுட் பக்கமும் சென்று வந்துள்ளார். இத்தனை ஆண்டுகளாக தனக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.
17 years !! Thank you all 🙏🙏🙏 pic.twitter.com/nAcqNjy19g
— Dhanush (@dhanushkraja) May 10, 2019