மருமகனுக்காக களமிறங்கிய 'தனுஷ்'...வைரல் ஆகும் புகைப்படங்கள்...விஷயம் என்ன...??

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ், செல்வராகவன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் சமீபத்தில் திருப்பதி கோயிலுக்கு விஜயம் செய்தனர்.  அப்போது கூட தனுஷ் வேஷ்டி சட்டையில் பக்தியுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆனது.

தனுஷ் மற்றும் செல்வராகவன் பங்குப்பெற்ற குடும்ப விழா l Dhanush And Selvaraghavan Turns Into Hairdresser For His Sister Child

தற்போது சமீபத்திய செய்தி என்னவென்றால், தனுஷ் ஒரு குழந்தைக்கு மாமன் முறை சடங்கு செய்துள்ளார். அதில் அவர் 'க்யூட்' ஆக கையில் கத்தரிக்கோல் உடன் குழந்தைக்கு முடி வெட்டுவது போல் போஸ் கொடுக்கிறார். 

மேலும் அந்த குழந்தை அவரது அக்கா கார்த்திகாவின் மகன். குழந்தைக்கு திருப்பதி கோயிலில் முடி செலுத்தப்பட்டது. இதனை தனது ட்விட்டர்  தளத்தில் வெளியிட்ட அவரது அக்கா "மாமாவின் அன்பை பெறுவதில் என் குழந்தைகள் எப்போதும் லக்கி தான். எங்களது மொத்த குடும்பமும்  திருப்பதியில் திவ்விய தரிசனத்தைப் பெற்றோம். என்ன ஒரு நாள் இது... எனது சகோதரர்கள் எப்போதுமே எங்கள் பக்கத்தில் நிற்க தவறுவதில்லை" என்று அன்பு பொங்க கூறியுள்ளார்.  

அடுத்து தனுஷ் நடித்த ஜகமே தந்திரம், கர்ணன் படங்கள் முடிந்த நிலையில், கார்த்திக் நரேன் உடன் ஒரு படமும், சன் பிக்சர்ஸ் உடன் மற்றோரு படமும் இணைய இருக்கிறார்.

Entertainment sub editor