பிரபல ஹீரோவை பாராட்டிய செல்வராகவன் - '' ஒரு லெஜண்ட் கூட வொர்க் பண்ணதுல எனக்கு பெருமை''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'அசுரன்' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தை தெலுங்கில் 'நாரப்பா' என்ற பெயரில் நடிகர் வெங்கடேஷ் நடித்து வருகிறார்.

Director Selvaraghavan appreciates Venkatesh and Trisha , Yuvan replies | வெங்கடேஷ், த்ரிஷாவை பாராட்டிய செல்வராகவன், யுவன் பதில்

இந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் வெங்கடேஷ் நடித்து கடந்த 2007 ஆம் ஆண்டு தெலுங்கில் 'ஆடவரி மாட்டலேகு அர்த்தாலே வேறுலே' என்ற படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் வெங்கடேஷிற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்த படம் தெலுங்கில் மாபெரும் வரவேற்பை  பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தில் கோட்டா ஸ்ரீநிவாச ராவ் இடம்  பெற்ற காட்சியை பகிர்ந்த வெங்கடேஷ், ''இந்த படம் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடியதாக அமைந்தது. குறிப்பாக எனக்கும் கோட்டா ஸ்ரீநிவாச ராவிற்கும் காட்சிகளை சிறப்பானதாக இருந்தது. இந்த படம் சிறப்பான வரவேற்பை பெற்றது. தனிப்பட்ட முறையில் இந்த வேடத்திற்காக எனக்கு பாராட்டுக்கள் கிடைத்தது.

இந்த சிறப்பான கதையில் என்னை இடம்பெறச் செய்ததற்கு செல்வராகவன், சிறப்பான நடிகையாக உடன் நடித்த த்ரிஷா,  சிறப்பான இசையை வழங்கிய யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்டோருக்கு நன்றி என்று தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்துள்ள செல்வராகவன், ''நன்றி சார்.  எனக்கு தான் மகிழ்ச்சி. உங்கள மாதிரி ஒரு லெஜண்ட் கூட வொர்க் பண்ணதுல எனக்கு தான் பெருமை. நீங்களும் த்ரிஷாவும் நான் பேப்பரில் எழுதியவற்றிற்கு உயிர் கொடுத்திருந்தீர்கள்'' என்றார். யுவன் ஷங்கர் ராஜா அளித்துள்ள பதிலில், ''நன்றி சார். என்னுடைய விருப்பமான ஆல்பமில் ஒன்று. இது நடைபெறக் காரணமாக இருந்த எனது இயக்குநர் செல்வராகவன் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.

இந்த படம் தமிழில் தனுஷ் - நயன்தாரா நடிக்க, 'யாரடி நீ மோகினி' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை மித்ரன் கே. ஜவஹர் இந்த படத்தை இயக்கியிருந்தார். நடிகர் ரகுவரன் தனுஷின் தந்தையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

Entertainment sub editor