'மாஸ்டர்' படத்தில் இருந்து 'வாத்தி கமிங்' பாடல் வெளியாகி யூடியூபில் 5 மணி நேரத்தில் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா வருகிற மார்ச் 15 ஆம் தேதி சன் டிவியில் நேரடி ஒளிபரப்பாகவிருக்கிறது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ரெய்னா இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து 'லைஃப் வெறி ஷார்ட் நண்பா' என்ற மாஸ்டர் பட பாடல்வரிகளை பகிர்ந்தது. அதற்கு பதிலளித்த மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ், 'ஃபிரெண்ட்ஸா நின்னா பவர் ஃபுல் மாப்பி, கொஞ்சம் சில் பண்ணு பேபி' என்று கமெண்ட் செய்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.
Friends ah ninna, powerful maapi. Konjam chill pannu baby! @chennaiipl #Master #MasterKuWhistlePodu https://t.co/Pg7PYVeCYZ
— XB Film Creators (@XBFilmCreators) March 10, 2020