"ஜென்டில்மேன் 2 படத்தின் இயக்குனர் இவரு தான்.." ஃபோட்டோவை பகிர்ந்து அறிவித்த கே.டி. குஞ்சுமோன்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட படங்களைத் தயாரித்து அவற்றை பிரமாண்டமாக விளம்பரபடுத்துவதில் புகழ்பெற்று விளங்கியவர் மெகா தயாரிப்பாளர் 'ஜென்டில்மேன்' கே.டி. குஞ்சுமோன்.

KT Kunjumon announced gentleman 2 director with photo

Also Read | Behindwoods விருது நிகழ்ச்சியில்.. நெகிழ்ந்து போன அனிருத்.. மேடையில் நடந்த வேற மாதிரி 'Surprise'

தமிழ் சினிமாவின் தொண்ணூறுகளில், கே.டி. குஞ்சுமோன் தயாரித்த சூரியன், ஜென்டில்மேன், காதலன், காதல் தேசம் மற்றும் ரட்சகன் ஆகிய படங்கள், பெரிய அளவில் வெற்றியும் பெற்றிருந்தது.

இதில், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான முதல் படமான 'ஜென்டில்மேன்' படத்தையும் கே.டி. குஞ்சுமோன் தான் தயாரித்து இருந்தார்.

ஜென்டில்மேன் 2..

இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல், ஷங்கர் அடுத்து இயக்கிய காதலன் படத்தையும், குஞ்சுமோன் தான் தயாரித்திருந்தார். இந்த படமும் பெரிய அளவில் ஹிட்டாகி இருந்தது. இதன், பின்னரும், பல ஹிட் படங்களை தயாரித்துள்ள குஞ்சுமோன், கடந்த சில ஆண்டுகளாக திரைத் துறையில் இருந்து படங்கள் எதுவும் தயாரிக்காமல் இருந்தார்.

KT Kunjumon announced gentleman 2 director with photo

இதனைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் திரைப்பட தயாரிப்பில் இறங்கி உள்ளார் குஞ்சுமோன். அதுவும்,  பெரிய அளவில் ஹிட்டாகி, தனது தயாரிப்பில் உருவாகி இருந்த 'ஜென்டில்மேன்' படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கி உள்ளது பற்றி, ஏற்கனவே அறிவிப்பினை.வெளியிட்டிருந்தார். இதன் ஆரம்ப கட்ட பணிகளை துவக்கி உள்ளதாகவும், 'ஜென்டில்மேன் 2' படக்குழு சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இந்த படத்தின் இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்து அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படாமல் இருந்து வந்தது. ஆனால், அதே வேளையில், படத்தின் நடிகை யார் என்பதையும் கே.டி. குஞ்சுமோன் கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தார். ஹீரோயினாக நயன்தாரா சக்ரவர்த்தி என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளார். குஞ்சுமோனுடன் நயன்தாரா சக்ரவர்த்தி இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இருந்தது.

KT Kunjumon announced gentleman 2 director with photo

படத்தின் இயக்குனர் யார்?

இந்நிலையில், "ஜென்டில்மேன் 2" படத்தின் இயக்குனர் யார் என்பது பற்றி, படக்குழு தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நானி மற்றும் வாணி கபூர் ஆகியோரை வைத்து "ஆஹா கல்யாணம்" என்னும் படத்தை இயக்கி இருந்த கோகுல் கிருஷ்ணா தான் ஜென்டில்மேன் 2 படத்தை இயக்க உள்ளார்.

KT Kunjumon announced gentleman 2 director with photo

கோகுல் கிருஷ்ணாவுடன் கே.டி. குஞ்சுமோன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ள நிலையில், இந்த புகைப்படமும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | பிரேமம் இயக்குனரின் Gold .. நயன்தாராவுடன் மீண்டும் இணைந்த மிரட்டல் நடிகர்.! வைரலாகும் First Look

KT Kunjumon announced gentleman 2 director with photo

People looking for online information on கே டி குஞ்சுமோன், ஜென்டில்மேன் 2, Gentleman 2, Gentleman 2 director, KT Kunjumon will find this news story useful.