பிரேமம் இயக்குனரின் Gold .. நயன்தாராவுடன் மீண்டும் இணைந்த மிரட்டல் நடிகர்.! வைரலாகும் First Look

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில், பிருத்விராஜ் மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்துள்ள 'Gold' படத்தின் ஃபர்ஸ்ட் லுக், தற்போது வெளியாகி உள்ளது.

Ajmal act with nayanthara in gold after netrikann movie

Also Read | நடிகை சுனைனா தனி ஹீரோயினாக நடிக்கும் ஆக்சன் படம்.. வெளியான மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான "நேரம்" படத்தின் மூலம், திரையுலகில் இயக்குனராக அறிமுகம் ஆனவர் அல்போன்ஸ் புத்ரன்.

தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில், நிவின் பாலி, நஸ்ரியா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அல்போன்ஸ் புத்ரனின் முதல் படமே, பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது.

அடுத்தடுத்து ஹிட் படங்கள்

இதன் பின்னர், அல்போன்ஸ் இயக்கிய 'பிரேமம்' திரைப்படமும் கேரளத்தில் மட்டுமில்லாமல், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரிய ஹிட்டடித்திருந்தது. நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட அனைவரின் நடிப்பும், அமோக வரவேற்பை பெற்றிருந்தது. மலையாள சினிமாவில் ஒரு பெஞ்ச் மார்க்காக கருதப்படும் பிரேமம் திரைப்படம், கடந்த 2015 ஆம் ஆண்டு, ரிலீஸ் ஆகி இருந்தது.

Ajmal act with nayanthara in gold after netrikann movie

இரண்டு படங்கள் மட்டுமே இயக்கி, ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி இருந்தார் அல்போன்ஸ் புத்ரன். இதனால், அவரது அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும், பல மடங்கு அதிகரித்திருந்தது. அந்த வகையில், பிருத்விராஜ் மற்றும் நயன்தாரா ஆகியோரை வைத்து Gold என்னும் திரைப்படத்தை அல்போன்ஸ் புத்ரன் இயக்கி உள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இருந்தது.

Ajmal act with nayanthara in gold after netrikann movie

அட்டகாசமாக வெளியான ஃபர்ஸ்ட் லுக்

மேலும், Gold படத்தின் டீசரும், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வெளியாகி, மக்கள் மத்தியில் அதிகம் லைக்குகளை அள்ளி இருந்தது. இதனைத் தொடர்ந்து, படத்தின் இறுதிக்கட்ட பணிகளான எடிட்டிங், போஸ்டர் டிசைன், இசை, ஒலிப்பதிவு உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

Ajmal act with nayanthara in gold after netrikann movie

மீண்டும் நயன்தாராவுடன்..

அந்த வகையில், Gold படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் முழுக்க, பிருத்விராஜ் மற்றும் நயன்தாரா ஆகியோருடன் Gold படத்திலுள்ள எக்கச்சக்க நடிகர், நடிகைகளும் இதில் இடம்பெற்றுள்ளனர். மேலும், இதில் மல்லிகா சுகுமாரன், லால் அலெக்ஸ், ஜெகதீஷ்,  பாபு ராஜ், வினய் ஃபோர்ட் என ஏராளமான நட்சத்திரங்கள், Gold படத்தில் நடித்துள்ளனர்.

Ajmal act with nayanthara in gold after netrikann movie

அதிலும் குறிப்பாக, நயன்தாரா தமிழில் நடித்திருந்த நெற்றிக்கண் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அஜ்மல், Gold படத்தின் மூலம் மீண்டும் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ளார். Gold படத்தில் அஜ்மல் நடிக்கவுள்ளது பற்றி, படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனையடுத்து, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் அவர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | பிரேமம் இயக்குனரின் அடுத்த படம் .. பிருத்வி - நயன்தாரா நடிப்பில் Gold படத்தின் செம First Look..

தொடர்புடைய இணைப்புகள்

Ajmal act with nayanthara in gold after netrikann movie

People looking for online information on Ajmal Ameer, Gold Movie, Nayanthara, Prithviraj will find this news story useful.