Behindwoods விருது நிகழ்ச்சியில்.. நெகிழ்ந்து போன அனிருத்.. மேடையில் நடந்த வேற மாதிரி 'Surprise'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

8 ஆவது Behindwoods Gold Medals விருது நிகழ்ச்சி, மே 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில், சென்னையின் தீவுத்தடலில் வைத்து மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.

Anirudh gets awestruck after performances in bgm awards 2022

Also Read | அஜித் நடிக்கும் #AK61 படத்தில் இணைந்த பிரபல இளம் ஹீரோ! போடு வெடிய.. வைரலாகும் செம்ம மாஸ் போட்டோ

இந்த இரண்டு நாட்களிலும், Behindwoods விருது நிகழ்ச்சியில், வெற்றிமாறன், செல்வராகவன், வெங்கட் பிரபு, VVS லக்ஷ்மண், எஸ் ஜே சூர்யா, ஞான வேல், லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன், நெல்சன், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத், மணிகண்டன், யோகி பாபு, சதீஷ், சன்னி லியோன், லிஜோமோள் ஜோஸ், ஆண்ட்ரியா, ஜோனிதா காந்தி, , சாய் பல்லவி, பிரியங்கா மோகன், ரம்யா பாண்டியன், அற்புதம் அம்மாள், சீமான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Behindwoods கோல்டு மெடல்ஸ் விருதுகள்

Behindwoods கோல்டு மெடல்ஸ் விருது நிகழ்ச்சி, பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்த நிகழ்வு தொடர்பாக தொடர்ந்து வீடியோக்களும், "Behindwoods TV" யூ டியூப் சேனலில் வெளியிடப்பட்டு வருகிறது. இதுவரை, ஏராளமான பிரபலங்கள் விருது வென்றிருந்த வீடியோக்களும், Red Carpet-ல் அனைவரும் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்ய தகவல் தொடர்பான வீடியோக்களும், வெளியாகி இருந்தது.

Anirudh gets awestruck after performances in bgm awards 2022

அனிருத் பாடல்கள்

இந்நிலையில், இசை அமைப்பாளர் அனிருத் முன்பு, அவரது பாடல்களை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகர்கள் பாடிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், பாடகர் பரத் 'பத்தல பத்தல' பாடலை பாடி இருந்தார். அதே போல, 'நீ பார்த்த விழிகள்' பாடலை ஸ்ரீநிஷாவும், 'மின்வெட்டு நாளில்' என்ற பாடலை மானசியும், குட்டி ஸ்டோரி பாடலை சாம் விஷாலும் பாடி இருந்தனர். இது தவிர, இன்னும் சில பாடகர்கள், அனிருத்தின் மற்ற ஹிட் பாடல்களையும் பாடி இருந்தனர்.

Anirudh gets awestruck after performances in bgm awards 2022

முழுக்க முழுக்க அவர்களின் பாடலை, ரசித்துக் கேட்ட அனிருத், அதிகம் நெகிழ்ந்தும் போனார். அதே போல, இந்த பெர்ஃபார்மன்ஸ் முடிந்த பின்னர், அனிருத் மற்றும் பூஜா ஹெக்டே குறித்து பரத் பேசி இருந்த விஷயங்களும் அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | பிரேமம் இயக்குனரின் Gold .. நயன்தாராவுடன் மீண்டும் இணைந்த மிரட்டல் நடிகர்.! வைரலாகும் First Look

BEHINDWOODS விருது நிகழ்ச்சியில்.. நெகிழ்ந்து போன அனிருத்.. மேடையில் நடந்த வேற மாதிரி 'SURPRISE' வீடியோ

Anirudh gets awestruck after performances in bgm awards 2022

People looking for online information on Anirudh, Anirudh Ravichander, Bgm awards 2022 will find this news story useful.