ஷாருக் கானின் கவனம் பெற்ற ’ஜவான்’போஸ்டர்… போலீஸார் உருவாக்கிய விழிப்புணர்வு மீம்… Viral pic

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஷாருக் கான் நடிப்பில் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

Atlee shah rukh jawan poster awareness meme by police

Also Read | “காலத்துக்கும் நிக்கும்…” விக்ரம் படத்தில் Applause அள்ளிய யுடியூபர்கள்… வெளியிட்ட வீடியோ

ஜவான்…

அட்லி (Atlee) இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இப்படத்திற்கு 'ஜவான்' 'Jawan' என பெயரிடப்பட்டுள்ளது. தலையில் பலத்த காயத்துடன், முகச்சிதைவுக்கு உள்ளாகி ஷாருக்கான் காட்சியளிப்பது போன்று பச்சை வண்ண பின்னணியில் முதல் லுக் போஸ்டர் அமைந்துள்ளது. இந்த போஸ்டரை ராகுல் நந்தா வடிவமைத்துள்ளார். இவர் ஏற்கனவே வலிமை படத்தின் போஸ்டரை வடிவமைத்தவர்.

Atlee shah rukh jawan poster awareness meme by police

பேன் இந்தியா ரிலீஸ்….

இந்த ஜவான் படம் பான் இந்திய படமாக தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.  இந்த படத்தின் படப்பிடிப்பு புனேயில் தொடங்கி, மும்பை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷாருக்கானுக்கு (Shah Rukh Khan) ஜோடியாக நயன்தாரா (Nayanthara) நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகை பிரியாமணி (Priyamani) ஒரு முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.இந்த ஜவான் படம், ஜூன் 2, 2023 அன்று திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

Atlee shah rukh jawan poster awareness meme by police

விழிப்புணர்வு மீம்…

இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. அதில் ஷாருக்கான் முகம் முழுவதும், துணியைக் கட்டிக்கொண்டு தோன்றியிருந்தார். இந்நிலையில் இந்த போஸ்டரை வைத்து தற்போது நாக்பூர் போலீஸார் உருவாக்கிய விழிப்புணர்வு மீம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. ஷாருக்கானின் அந்த போஸ்டரை பகிர்ந்து “நீங்கள் ஹெல்மெட் அணியாமல் செல்லும்போது” எனக் கேப்ஷன் வைத்து விழிப்புணர்வு மீமாக மாற்றி வெளியிட அது வைரலாகியுள்ளது.

Also Read | ஜீவா, ‘மிர்ச்சி’ சிவா & யோகி பாபு நடிப்பில் ‘கோல்மால்’… First look உடன் வெளியான ரிலீஸ் Update

தொடர்புடைய இணைப்புகள்

Atlee shah rukh jawan poster awareness meme by police

People looking for online information on Atlee, Atlee Hindi Movie, Jawan, Shah rukh jawan poster, Shahrukh Khan will find this news story useful.