www.garudabazaar.com

ஜென்டில்மேன்-2 .. பிரம்மாண்ட மியூசிக் டைரக்டரை அறிவிச்ச தயாரிப்பாளர்.. தங்க காசு யாருக்கு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரம்மாண்ட தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன் தயாரிக்கும் ஜென்டில்மேன்-2 படத்திற்கு இசையமைக்கும் பிரமாண்ட இசையமைப்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

KT Kunjumon gentleman part 2 music director Big announcement

பிரம்மாண்ட படைப்புகள்

தென்னிந்திய மொழிகளில் முன்னணி தயாரிப்பாளராக, பல பிரம்மாண்ட படைப்புகளை தந்த மெகா தயாரிப்பாளர் 'ஜென்டில்மேன் ' K.T.குஞ்சுமோன். சரத்குமார் முதல் இயக்குநர் ஷங்கர் வரை பல ஜாம்பவான்களை திரையுலகிற்கு தந்தவர்.

ஜென்டில்மேன்-2

ஜென்டில்மேனை தொடர்ந்து, ரட்சகன் உள்ளிட்ட பல பிரம்மாண்ட பான் இந்திய படங்களை தயாரித்தது மட்டுமில்லாமல், தான் தயாரிக்கவிருக்கும் திரைப்படங்களை விளம்பரப் படுத்துவதிலும் சரி, படத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நடத்துவதிலும் சரி பிரம்மாண்டமாக அவற்றை நிகழ்த்திக்காட்டியவர்.

இவர் தற்போது மீண்டும் திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளார். ஆம், இயக்குநர் ஷங்கர் இயக்கிய முதல் படமான ஜென்டில்மேன் படத்தை தயாரித்த K.T.குஞ்சுமோன் தற்போது ஜென்டில்மேன்-2 படத்தை தயாரிக்கவுள்ளார். 

இசையமைப்பாளரை கணித்தால் தங்கக்காசு

முன்னதாக, தான் தயாரிக்கவிருக்கும் ஜென்டில்மேன்-2 படத்திற்கு இசை அமைப்பாளர் யார் என்பதை கணித்து சொல்லுமாறு, ரசிகர்களுக்கு ஒரு போட்டியாக அறிவித்திருந்தார். இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை சரியாக கணிக்கும் ரசிகர்களில் முதல் மூன்று பேருக்கு தங்க காசுகள் பரிசாக அளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்த செய்தி சோசியல் மீடியா முழுவதும் பரபரப்பானது.

இசையமைப்பாளர் யார்?

இந்நிலையில் படத்தின் முதல் அறிவிப்பாக படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். ஆம் உலகமே கொண்டாடிய பாகுபலி போன்ற பிரமாண்ட படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் M.M.கீரவாணி தான் ஜென்டில்மேன்-2 படத்திற்கு இசையமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார்.

தெலுங்கில் S.S.மரகதமணி என்று அறியப்படும் M.M.கீரவாணி இப்பொழுது, இந்திய அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டும் வரும் S.S.ராஜ்மௌலியின் ஆர்.ஆர்.ஆர் (RRR) படத்திற்கு இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதர அறிவிப்புகள்

இதனிடையே அறிவிக்கப்பட்ட அந்த தங்கக்காசு போட்டியில் பல ரசிகர்கள் கலந்து கொண்டார்கள். அவற்றுள் சிலர் சரியான பதிலையும் பதிவிட்டிருந்தார்கள். அவர்களில் கோல்ட் காயின் வெற்றி பெற்றவர்கள் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதும். இதையடுத்து, இப்படத்தின் டைரக்டர் யார் என்பதும் விரைவில் வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: ‘மாஸ்டர்’ மகேந்திரன் நடிக்கும் புது படம்.. கமல் பாடலில் இருந்து செம்ம குஷியான டைட்டில்.!

தொடர்புடைய இணைப்புகள்

KT Kunjumon gentleman part 2 music director Big announcement

People looking for online information on Gentleman, Gentleman 2 music director, Gentleman2, Maragathamani, MM Keeravani, RRR, SS Maragathamani, SS Rajamouli will find this news story useful.