RRR Others USA
www.garudabazaar.com

ஜெண்டில்மேன் 2-ல் ஹீரோயினாகும் புது 'நயன்தாரா'.. ஃபோட்டோவை பகிர்ந்த K.T.குஞ்சுமோன்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கே டி குஞ்சுமோன் தயாரிக்கும் ஜெண்டில்மேன் 2 படத்தின் ஹீரோயினாக நயன்தாரா சக்ரவர்த்தி என்பவர் அறிமுகம் ஆகவுள்ளார்.

KT Kunjumon launching Nayanthara chakravarthi in Gentleman 2

Cute ஸ்மைல் நயன்தாரா… Mass ஆக்ஷன் பிருத்விராஜ் – 'பிரேமம்' இயக்குநரின் Gold பட டீசர்!

தமிழ் திரையுலகில் பிரமாண்ட படங்களைத் தயாரித்து அவற்றை பிரமாண்டமாக விளம்பரபடுத்துவதில் புகழ்பெற்று விளங்கியவர் மெகா தயாரிப்பாளர் ' ஜென்டில்மேன்' கே.டி.குஞ்சுமோன். 90 களில் அவர் தயாரித்த சூரியன், ஜெண்டில்மேன், காதலன், காதல் தேசம் மற்றும் ரட்சகன் ஆகிய படங்கள் அவற்றின் பிரம்மாண்ட தயாரிப்புக்காகவே பேசப்பட்டன.

ஷங்கரோடு கூட்டணி…

இயக்குனர் ஷங்கர் முதல் முதலில் இயக்கிய ஜெண்டில்மேன் படத்தை கேடி குஞ்சுமோன்தான் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அதன் பின்னர் ஷங்கரின் அடுத்த படமான காதலன் படத்தையும் அதிக பொருட்செலவில் தயாரித்தார். காதலன் படமும் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது.

KT Kunjumon launching Nayanthara chakravarthi in Gentleman 2

கவனத்தை ஈர்த்த ரட்சகன்…

அறிமுக இயக்குனர் பிரவீன் காந்தி இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான ரட்சகன் படத்தை கே டி குஞ்சுமோன் தயாரித்தார். இந்த படத்தின் பிரம்மாண்ட சண்டை காட்சிகளும் பாடல்கள் படமாக்கப்பட்ட விதமும் இன்றளவும் பேசப்பட்டு வருகின்றன.  அதுபோலவே இயக்குனர் கதிர் இயக்கத்தில் குஞ்சுமோன் தயாரித்த காதல்தேசம் படமும் ரசிகளின் வரவேற்பைப் பெற்ற படமாக அமைந்தது. குஞ்சுமோன் தன்  மகன்  எபியைக் கதாநாயகனாக அறிமுகம் செய்ய கோடீஸ்வரன் என்ற படத்தை பிரமமாண்டமாக தொடங்கினார். ஆனால் அந்த படம் முழுவதும் முடியாத நிலையில் கைவிடப்பட்டது.

KT Kunjumon launching Nayanthara chakravarthi in Gentleman 2

குஞ்சுமோன் ரி எண்ட்ரி…

பல காலமாக திரைத்துறையில் ஒதுங்கி இருந்த இவர் தற்போது மீண்டும் திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளார். தனது ரி எண்ட்ரியை சில மாதங்களுக்கு முன்னர் அதிரடியாக அறிவிப்பு செய்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி இருந்தார். தனது தயாரிப்பில் உருவான ஜெண்டில் மேன் படத்தின் இரண்டாம் பாகத்தைத் தொடங்க உள்ளதாகவும், அதன் ஆரம்பகட்ட பணிகளை துவக்கியுள்ளதாகவும் அறிவித்திருந்தார். இப்படத்தின் இயக்குநர், நடிகர், தொழில்நுட்ப குழுவினர் இன்னும் அறிவிகக்ப்படவில்லை. இந்நிலையில் இப்போது படத்தின் ஹீரோயினை அறிமுகப்படுத்தியுள்ளார்.

KT Kunjumon launching Nayanthara chakravarthi in Gentleman 2

புது நயன்தாரா…

தற்போது ஜெண்டில்மேன் 2 படத்தின் ஹீரோயினாக நயன்தாரா சக்ரவர்த்தி என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் குஞ்சுமோனுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன. ஏற்கனவே தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக நயன்தாரா இருக்கும் நிலையில் இப்போது அதே பெயரில் மற்றொரு நடிகை அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து. குஞ்சுமோனுடன் நயன்தாரா சக்ரவர்த்தி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன.

பிகினி உடை.. கடலில் குளியல்.. கடற்கன்னியாய் மாறிய 'பேச்சுலர்' திவ்யபாரதி.. லேட்டஸ்ட் வீடியோ..

தொடர்புடைய இணைப்புகள்

KT Kunjumon launching Nayanthara chakravarthi in Gentleman 2

People looking for online information on Arjun, Gentleman 2, KT Kunjumon, Nayanthara chakravarthi will find this news story useful.