www.garudabazaar.com

சமந்தா நடித்த 'யசோதா' திரைப்படம்.. அமெரிக்காவுல மட்டும் இத்தனை கோடி வசூலா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமந்தா நடித்த 'யசோதா'படத்தின் அமெரிக்க வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

Samantha Yashoda Movie USA Box Office collection

Also Read | அனிருத் வெளியிட்ட 'DSP' படத்தின் முதல் சிங்கிள்.. பட்டைய கிளப்பும் கொண்டாட்ட பாடல்!

சமந்தா  தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்‌ விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார். 

சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார்.

சமந்தா, தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ 'யசோதா', "குஷி' படங்களில் தற்போது நடித்து வருகிறார்.  நடிகை டாப்ஸியின் அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார் நடிகை சமந்தா.

Samantha Yashoda Movie USA Box Office collection

தற்போது நடிகை சமந்தா நடித்த யசோதா படம் கடந்த நவம்பர் 11 ஆம் தேதி வெளியானது. வாடகைத் தாயாக நடிகை சமந்தா இந்த படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், பிரியங்கா சர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Samantha Yashoda Movie USA Box Office collection

'யசோதா’ திரைப்படத்தினை Sridevi Movies  சார்பில்  சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரித்தனர். ஹரி-ஹரீஷ்  இப்படத்தில் இயக்குனர்களாக பணிபுரிந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த திரைப்படம், ஒரு வாரத்தில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 5 லட்சம் அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 4.06 கோடி ரூபாயை வசூலித்து உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | VARISU: இசையமைப்பாளர் தமன் பிறந்தநாளில் 'ரஞ்சிதமே' பாடல் படைத்த மாஸ் சாதனை! கொண்டாடும் ரசிகர்கள்

தொடர்புடைய இணைப்புகள்

Samantha Yashoda Movie USA Box Office collection

People looking for online information on Samantha, Samantha ruth prabhu, Yashoda Movie, Yashoda Movie USA Box Office collection will find this news story useful.