www.garudabazaar.com

Kantara : “இதுவும் என் படம்தான்..”.. சக்கை போடு போடும் ‘காந்தாரா’ குறித்து பேசிய KGF யஷ்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கன்னட மொழியில் உருவாகிய ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான 'காந்தாரா', கடந்த செப்டம்பர் 30 அன்று வெளியானது.

KGF Actor Yash about Kantara காந்தாரா படம் குறித்து யஷ்

விமர்சகர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து நல்ல விமர்சனங்களை காந்தாரா திரைப்படம் பெற்றிருந்தது. இதனால், கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் படத்தின் வசூல் அதிகரித்தது. இதே தலைப்புடன் இந்தப் படத்தின் தமிழ் பதிப்பு தமிழ்நாட்டிலும்  வெளியாகியது.

கேஜிஎஃப் புகழ் ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, நடித்துள்ள இந்த படத்தைப் பார்த்த திரைப்பட ஆர்வலர்கள் ரிஷப் ஷெட்டியின் (குறிப்பாக கிளைமாக்ஸில்) மற்றும் படத்தில் வரும் மண் சார்ந்த பாத்திரங்களின் அசாத்திய நடிப்பினை பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் கூட காந்தாரா திரைப்படத்தை பார்த்து விட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் - நடிகர் ரிஷப் ஷெட்டி மற்றும் படக்குழுவினரை பாராட்டி இருந்தார். இதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்தை நேரில் சந்தித்தும் வாழ்த்து பெற்றிருந்தார் ரிஷப் ஷெட்டி. இந்த நிலையில், காந்தாரா திரைப்படம் குறித்து பிரபல கன்னட நடிகர் யஷ் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக, KGF (1 & 2), காந்தாரா, 777 சார்லி, கருட காமன விருஷப வாகன உள்ளிட்ட கன்னட திரைப்படங்கள் இந்திய அளவில் அதிக கவனம் ஈர்த்திருந்தது. இதில், யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி இருந்த KGF 2 திரைப்படம், இந்திய அளவில் பேன் ஸ்டார் ஆகவும் யஷ்ஷை உயர்த்தியது மட்டுமில்லாமல், பல பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளையும் அடித்து நொறுக்கி இருந்தது.

இதனிடையே, சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருந்த நடிகர் யஷ், KGF 3 படத்தின் வேலைகள் தற்போது ஆரம்பிக்காது என்றும் தெரிவித்திருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் காந்தாரா திரைப்படம் குறித்து பேசிய நெறியாளர், “உங்களுடைய திரைப்படம் என முதலில் தெரிவித்து, பின்னர் உங்களுடைய திரைப்படம் அல்ல, ஒரு புதிய கன்னட திரைப்படம்” என்றும் குறிப்பிட்டார்.

KGF Actor Yash about Kantara காந்தாரா படம் குறித்து யஷ்

இதற்கு பதில் சொன்ன யஷ்,  “இதுவும் என்னுடைய படம் தான் சார். அது (காந்தாரா) என் படம் இல்லை என சொன்னீர்கள். ஆனால் என்னுடைய படம் தான். கர்நாடகாவில் இருந்து தற்போது வந்த காந்தாரா திரைப்படம் சிறப்பாக ஓடி கொண்டிருக்கிறது. அனைத்து இடங்களிலும் சிறப்பாக ஓடுகிறது. கருட கமனா விருஷப வாகன, 777 சார்லி உள்ளிட்ட கன்னட திரைப்படங்களும் நன்றாக போனது” என தெரிவித்தார்.

Tags : KGF, Kgf 2, Kantara, Yash

தொடர்புடைய இணைப்புகள்

KGF Actor Yash about Kantara காந்தாரா படம் குறித்து யஷ்

People looking for online information on Kantara, KGF, Kgf 2, Yash will find this news story useful.