yashoda : பிரபல ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகும் சமந்தா நடித்த யசோதா திரைப்படம்.!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழில் வாடகைத் தாயாக நடிகை சமந்தா நடித்துள்ள யசோதா படம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் நவம்பர் 11 ஆம் தேதி வெளியானது.
![yashoda to stream in OTT from dec 9 starring samantha yashoda to stream in OTT from dec 9 starring samantha](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/yashoda-to-stream-in-ott-from-dec-9-starring-samantha-photos-pictures-stills.jpeg)
Also Read | வாரிசு படத்தில் S.J. சூர்யா.. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வைரல் வீடியோ!
இந்தப் படத்தில், பிரபல நடிகர்களான வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், பிரியங்கா சர்மா மற்றும் பலர் நடிக்கிறார்கள். 'யசோதா’ திரைப்படத்தினை Sridevi Movies சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரித்துள்ளனர். ஹரி-ஹரீஷ் இப்படத்தில் இயக்குனர்களாக அறிமுகமாகிறார்கள்.
இப்படம் ரூ.40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானதாகவும் முதல்நாள் மட்டும் ரூ.6.32 கோடி வரை வசூலித்தததாகவும் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. தவிர, படம் வெளியான 10 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.33 கோடி வரை வசூலித்துள்ளதாகவும் , குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் சுமார் 5 லட்சம் அமெரிக்க டாலர்களை (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 4.06 கோடி ரூபாயை) வசூலித்து சாதனை படைத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்படம் வரும் டிசம்பர் 9-ம் தேதி, பிரபல ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read | லீக் ஆன 'துணிவு' படத்தின் பாடல் வீடியோ.. வைரலாகும் பாடகர் வைசாக்கின் இன்ஸ்டாகிராம் பதிவு!