www.garudabazaar.com

"நான் நம்புறேன், நீங்க Good Boy தான்".. TTF வாசனிடம் சொன்ன சன்னி லியோன்!!.. ஆஹா, இது எப்ப?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் திரைப்படங்களில் நடித்து இந்தியா முழுவதும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளவர் நடிகை சன்னி லியோன்.

Sunny Leone says TTF Vasan is Good boy in festival

Also Read | ADK அப்பாகிட்ட ஷிவின்-ஐ போட்டு கொடுத்த அமுதவாணன்.. பதிலுக்கு அவர் சொன்ன விஷயம் தான்!!

ஹிந்தி திரைப்படங்கள் மூலம் தனது திரை பயணத்தை சன்னி லியோன் ஆரம்பித்தாலும், இன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும், சன்னி லியோன் கவனம் செலுத்தி வருகிறார்.

சன்னி லியோன் தற்போது முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'OMG' படம், டிசம்பர் 30 ஆம் தேதியன்று வெளியாக உள்ளது. “ஓ மை கோஸ்ட்” (OMG) திரைப்படத்தினை  VAU MEDIA ENTERTAINMENT சார்பில் தயாரிப்பாளர் D.வீரா சக்தி மற்றும் WHITE HORSE STUDIOS சார்பில் K. சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

Sunny Leone says TTF Vasan is Good boy in festival

நடிகை சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சதீஷ், தர்ஷா குப்தா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை, ஜி.பி. முத்து மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தீபக் D. மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், Behindwoods சேனல் நடத்திய Fans Festival நிகழ்ச்சியில் சன்னி லியோன் சமீபத்தில் கலந்து கொண்டார். இதில், TTF வாசன் மற்றும் சன்னி லியோன் ஆகியோருக்கு இடையே நடந்த உரையாடல் தொடர்பான வீடியோ, தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.

Sunny Leone says TTF Vasan is Good boy in festival

பைக் ஓட்டி வீடியோக்கள் வெளியிட்டு மக்கள் மத்தியில் அதிக பிரபலம் ஆனவர் TTF வாசன். சமீபத்தில் அவரை சுற்றி சில பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறி இருந்த சூழலில், தற்போது சன்னி லியோன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அப்போது, சன்னி லியோனின் தீவிர ரசிகை என TTF வாசனை மேடையில் அறிமுகம் செய்து வைத்தனர்.

Sunny Leone says TTF Vasan is Good boy in festival

அந்த சமயத்தில் சன்னி லியோனிடம் TTF வாசன் பேச, "Government கிட்டையே வெறித்தனமா  பேசக் கூடிய ஆளு, மேம் கிட்ட பவ்யமா பேசுறாப்ல" என குரேஷி ஜாலியாக குறிப்பிடுகிறார். "அண்ணா கோர்த்து விட்டுறாதணா. ஏற்கனவே அறுந்து தொங்கிட்டு இருக்கு" என TTF வாசனும் கூறுகிறார். இதன் பின்னர், நான் Good Boy என்று சன்னி லியோனிடம் TTF வாசன் தெரிவிக்க, "நான் நம்புகிறேன். நீங்கள் Good Boy மாதிரி இருக்கிறீர்கள்" என்றும் சன்னி லியோன் பதில் சொல்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சதீஷ், ஜிபி முத்து உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | "நீ கவலைப்படாத, நாங்க எல்லாரும் இருக்கோம்".. ஷிவினிடம் அன்பை பொழிந்த விக்ரமன் அப்பா!!.. Emotional

"நான் நம்புறேன், நீங்க GOOD BOY தான்".. TTF வாசனிடம் சொன்ன சன்னி லியோன்!!.. ஆஹா, இது எப்ப? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sunny Leone says TTF Vasan is Good boy in festival

People looking for online information on Sunny Leone, TTF Vasan will find this news story useful.