www.garudabazaar.com

"ரொம்ப பதட்டமா இருக்கேன்".. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சமந்தாவின் இன்ஸ்டா பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Samantha Latest Instagram Post about Yashoda Movie Release

Also Read | நாள் பூரா வெடித்த சண்டை.. தனா & மணி. இப்போ எப்படி ஆகிட்டாங்க பாருங்க.. 😍 Bigg Boss 6 Tamil

சமந்தா (Samantha) தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார். 

சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார்.

சமந்தா, தற்போது தமிழில் இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படம்,  தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ 'யசோதா', "குஷி' படங்களில் நடித்துள்ளார். நடிகை டாப்ஸியின் அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார் நடிகை சமந்தா.

Samantha Latest Instagram Post about Yashoda Movie Release

தற்போது வாடகைத் தாயாக நடிகை சமந்தா நடித்துள்ள யசோதா படம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் நாளை நவம்பர் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது. 

இந்தப் படத்தில், பிரபல நடிகர்களான வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், பிரியங்கா சர்மா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

'யசோதா’ திரைப்படத்தினை Sridevi Movies  சார்பில்  சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரித்துள்ளனர். ஹரி-ஹரீஷ்  இப்படத்தில் இயக்குனர்களாக அறிமுகமாகிறார்கள்.

Samantha Latest Instagram Post about Yashoda Movie Release

இந்த படத்தின் ரிலீஸை முன்னிட்டு நடிகை சமந்தா பல்வேறு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் நடிகை சமந்தா யசோதா படத்தின் ரிலீஸை ஒட்டி ஒரு பதிவிட்டுள்ளார்.  அந்த பதிவில், "ரொம்ப பதட்டமாக உணர்கிறேன் அதேவேளையில் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளேன். இன்னும் ஒரு நாள் தான். நல்ல மகிழ்வோடு என் இயக்குனர், தயாரிப்பாளர் & படக்குழு அனைவரும் உங்களுடைய விமர்சனங்களை எதிர்பார்க்கிறோம்." என சமந்தா பதிவிட்டுள்ளார்.

 

Also Read | VJS46: பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி.. கேரக்டர் பெயருடன் வெளியான தெறி அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Samantha Latest Instagram Post about Yashoda Movie Release

People looking for online information on Samantha, Samantha ruth prabhu, Yashoda, Yashoda Movie Release Update will find this news story useful.