Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

TTF Vasan : "கோட் நல்லாருக்கு .. ஃபோட்டோ எடுத்துக்குறீங்கள..?" - KGF யாஷ் ஸ்டைலில் டிடிஎஃப்.. வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமூக வலைதளங்களில் இரண்டு நாட்களாக டிடிஎஃப் வாசன் பிரபலமாகியுள்ளார். 90ஸ் கிட்ஸ்களுக்கு டிடிஎஃப் வாசன் யார் என்று தெரிய வாய்ப்பு குறைவுதான் என்றாலும் 2கே கிட்ஸ்களுக்கு அவர் தான் ஹீரோ.

Bike Rider TTF Vasan New Reels KGF Yash Viral டிடிஎஃப் வாசன்

கோவையில் ஒரு கிராமத்தில் பிறந்த டிடிஎஃப் வாசனை சுமார் 27 லட்சம் பேர் சமூக வலைதளங்களில் youtube மூலம் பின் தொடருகின்றனர். ஆம், பைக் மீது அலாதி பிரியம் உள்ள இளைஞர்களுக்கு டிடிஎஃப் வாசன் நன்கு பரீச்சயமானவர்.  முன்னதாக இவர் நடத்திய இந்த ஒரே ஒரு பிறந்தநாள் மீட் அப் மூலம், ஓவர் நைட்டில் வைரலாகினார். இவருக்கு எங்கிருந்து இப்படி ஒரு ரசிகர்கள் படை வந்தது என 2கே கிட்ஸை தவிர்த்த இணையவாசிகள் ஆச்சர்யப்பட்டனர். 

பைக்கில் சாகசங்கள், ரேஸிங் என இந்த 23 வயது TTF வாசன், அவ்வப்போது தம் ரசிகர்களை சந்திப்பதும், பைக் ரைடுகளை குறித்த தகவல்களை பதிவிடுவதும், பைக் ரைடு செய்து - அதை வீடியோவாக பதிவிடுவதும் வழக்கம். அண்மையில் கூட, மாலையும் கழுத்துமாக இருந்த டிடிஎஃப் வாசன், அது தொடர்பாக மீண்டும் விளக்கத்துடன் ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார்.  அந்த விளக்கத்தில், “நான் அண்ணி என்றெல்லாம் குறிப்பிட்டு பேசியிருந்தேன்.. அதனால் மாலையும் கழுத்துமாக இந்த வீடியோவில் என்னை பார்த்துவிட்டு யாரும் குழம்ப வேண்டாம். அதற்காக தான் இந்த விளக்கம். நான் திருமணம் செய்வதென்றால் நிச்சயமாக 24, 25 வயதாகிவிடும். இப்போது எனக்கு வயது 22 தான் ஆகிறது.” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில்தான் கேஜிஎஃபில் நாயகன் யஷ் பேசும் வசனத்தை பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் டிடிஎஃப் வாசன். அதில், கேஜிஎஃப் படத்தில் யாஷ் பேசும் வசனமான, “என் ஃபோட்டோ இல்லனு வருத்தப்பட்டீங்களாமே.. கோட் நல்லாருக்கு எடுத்துக்குறீங்களா?” என கேட்கும் வசனத்துக்கு இன்ஸ்டாவில் ரீல்ஸ் பதிவிட்டுள்ளார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by vasan (@vasan__enfielder)

இவரது இந்த இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Bike Rider TTF Vasan New Reels KGF Yash Viral டிடிஎஃப் வாசன்

People looking for online information on TTF Vasan, Ttf vasan latest speech, Ttf vasan latest video, TTF Vasan Ride will find this news story useful.