வெப் சீரிஸில் காஜலுக்கு ஜோடியாகும் பிரபல ஹீரோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் வெப் சீரிஸின் ஹீரோ குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Vaibhav to pair with Kajal Aggarwal in Venkat Prabhu's web series

இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது சிம்புவுடன் இணைந்து ‘மாநாடு’ திரைப்படத்தை இயக்குகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு ‘மாநாடு’ திரைப்படத்திற்கு முன்பாக வெப் சீரிஸ் ஒன்றை இயக்க திட்டமிட்டிருக்கிறார்.

அதன்படி, ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் இந்த வெப் சீரிஸில் நடிகை காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார். இந்நிலையில், நமக்கு கிடைத்த தாக்வலின்படி நடிகர் வைபவ் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த கதையை திரைப்படமாக உருவாக்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது 10 எபிசோட்களை கொண்ட வெப் சீரிஸாக உருவாக்கும் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

தற்போது இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘கோமாளி’ திரைப்படத்தில் காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். இது தவிர தமிழில் குயீன் ரீமேக் படமான ‘பாரிஸ் பாரிஸ்’, தெலுங்கில் ‘ரண்ரங்கம்’, ஷங்கரின் ‘இந்தியன் 2’ ஆகிய திரைப்படங்களில் காஜல் நடிக்கிறார்.