"கவின யாருக்கும் பிடிக்காது..” - பிக் பாஸ் குறித்து ‘வாணி ராணி’ சீரியல் பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 86 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடையே போட்டிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

Kavin Vaani Raani Thenu Neha Rajesh about Bigg boss Tamil 3

பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா விஜயகுமார் இரண்டாவது முறையாக வெளியேறியதை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ராதிகா சரத்குமாரின் நெடுந்தொடரான ‘வாணி ராணி’ சீரியலில் ‘தேனு’ கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை நேஹா ராஜேஷ். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து Behindwoods தளத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் போட்டியாளர்கள் குறித்த தனது கருத்தினை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

இவர், வனிதாவின் எவிக்‌ஷனின் போது லைவ் ஆடியன்ஸாக பிக் பாஸ் அரங்கில் இருந்தார். அதை பற்றி பேசுகையில், வனிதா வெளியேறியபோது சேரன் சற்று ஓவர் ரியாக்ட் செய்தது வித்தியாசமாக இருந்தது. அவர் வெளியேறிய போது வனிதா மனதார வருத்தப்பட்டார், அதனை அவர் சீக்ரெட் ரூமில் இருந்து பார்த்துவிட்டு வந்த பிறகும் இப்படி செய்தது சரியாக தோன்றவில்லை என நேஹா கூறினார்.

மேலும், கவின் குறித்து பேசிய அவர், ‘கவினை யாருக்கும் பிடிக்காது, ஆனாலும் நிகழ்ச்சியில் இன்னும் தொடர்கிறார். அவரை பிடித்தவர்கள் அவருக்கு ஆதரவளிக்கிறார்கள். சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்தபோது அவருக்கு இருந்த ரசிகர்கள் வட்டம் ஒருவேளை அவருக்கு ஆதரவளிக்கலாம் என்று கூறினார். Freeze டாஸ்கில் கவினின் நண்பர் வந்து அடித்துவிட்டு போன பிறகும் அவர் மாறவில்லை. கவினை தவிர பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவருமே நேர்மையாக இருப்பதாக தான் கருதுவதாக நேஹா தெரிவித்தார்.

"கவின யாருக்கும் பிடிக்காது..” - பிக் பாஸ் குறித்து ‘வாணி ராணி’ சீரியல் பிரபலம் வீடியோ