“கஷ்டமா இருந்தாலும் வேற வழியில்ல குருநாதா..”- சாண்டி ஆடும் நாமினேஷன் கேம் Strategy

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதை தொடர்ந்து போட்டியாளர்களுக்குள் போட்டி கடினமாகியுள்ளது.

Sandy Sherin Tharshan Nomination Bigg Boss Tamil 3 Sep 16 Promo 3

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் வனிதா விஜயகுமார் எலிமினேட் செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து இந்த வாரத்துக்கான எவிக்‌ஷனுக்கு போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் 2 போட்டியாளர்களை காரணத்துடன் நாமினேட் செய்ய வேண்டும்.

அந்த வகையில், இன்றைய எபிசோடிற்கான முதல் புரொமோ வீடியோவில், போட்டியாளர்கள் அனைவரும் ‘டிக்கெட் டூ ஃபினாலே’ டாஸ்கில் தீவிரமாக விளையாடினர். அதை தொடர்ந்து வெளியான புரொமோ வீடியோவில், வேறு வழியின்றி சேரன் சாண்டி மற்றும் கவின் ஆகியோரை நாமினேட் செய்வதாக கூறினார்.

தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரொமோவில், நான் ஒரு கேம் விளையாடுறேன். Tough போட்டியாளர் யாருன்னு பாத்தா சேரன் மற்றும் ஷெரின். இந்த வாரம் சேரன் எலிமினேட் ஆக மாட்டாரு. அவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. நாம ஒரு கேம் விளையாடுறோம், ஆனா அவங்க ஒரு கேல்குலேஷன் வச்சி இருப்பாங்க.. கஷ்டமா இருந்தாலும் வேற வழியில்ல குருநாதா.. ஷெரின் அண்ட் சேரன்’ என சாண்டி தனது நாமினேஷனை முடித்திருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் ஆட்கள் குறைந்து வர வர போட்டியாளர்கள் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துக் கொண்டிருக்கும் சூழலில் இந்த நாமினேஷன் புராசஸ் சற்று விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளது. ஆகையால், சேரன், சாண்டியை தவிர மற்ற போட்டியாளர்களின் நாமினேஷனை இன்றைய எபிசோடில் காணலாம்.

“கஷ்டமா இருந்தாலும் வேற வழியில்ல குருநாதா..”- சாண்டி ஆடும் நாமினேஷன் கேம் STRATEGY வீடியோ