'நான் தான முதல்ல இருக்கணும் ?' - Bigg Boss Housematesக்கு சேரன் அதிரடி விளக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றைய தினம் போட்டியாளர்கள் முன்பு பேசிய Ticket to Finale பற்றி தெரிவித்தது.

Kavin, Losliya, Cheran, Kamal Haasan Bigg Boss 3 Promo 1 Sept 17

அதன் படி, இந்த வாரம் முழுவதும் கொடுக்கப்படும் டாஸ்க்குகளில் சிறந்து விளங்குபவர்கள் நேரடியாக 100 நாட்கள் வரை வரலாம் என்று கூறப்பட்டது. மேலும் இந்த வாரத்துக்கான நாமினேஷனில் ஷெரின், கவின், சேரன், லாஸ்லியா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் இன்று(செப்டம்பர் 17) வெளியான முதல் புரோமோவில், ஒரு போர்டில் 1 முதல் 7 நம்பர்கள் உள்ளது. அதன் அருகில் போட்டியாளர்களின் ஃபோட்டோ கொடுக்கப்பட்டிருந்தது. அதனை போட்டியாளர்கள் வரிசைப்படுத்த வேண்டும்.

முதலில் வரும் சேரன், ''பர்ஸ்ட்டுனா நான் தான முதல்ல இருக்கணும். அப்பத்தான அது பர்ஸ்ட். இங்க இருக்குற எல்லோரையும் விட எனக்கு வயசு கொஞ்சம் அதிகம். அனுபவங்களும் அதிகம். இதுல இளைஞர்கள் தான ஜெய்ப்பாங்க. உனக்கு என்ன வாய்ப்பிருக்குனு கேட்டாங்க. எல்லோருக்கும் தனியா ஃபேன்ஸ், ஆர்மி இருக்காங்க. அவங்க எனக்கு ஃபாலோயர்ஸ். கண்டிப்பா ஜெய்ப்பேன்னு சொன்னேன்''. என்றார்.

'நான் தான முதல்ல இருக்கணும் ?' - BIGG BOSS HOUSEMATESக்கு சேரன் அதிரடி விளக்கம் வீடியோ