Bigg Boss 3: 'சேரப்பா பத்தி தான் சொன்னேன்' - இதற்காக கவினை சமாதானப்படுத்தும் லாஸ்லியா
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 17, 2019 11:45 AM
கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் குடும்பத்தார் உள்ளே வந்து அவர்கள் டைட்டில் வெல்வதற்கான ஊக்கம் அளித்து சென்றனர். குறிப்பாக லாஸ்லியாவின் பெற்றோர் உள்ளே வந்த நிகழ்வு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

நேற்றைய தினம் பிக்பாஸ் போட்டியாளர்களின் பெற்றோர்கள் உள்ளே வந்து அறிவுரைகள் கூறிய நிகழ்வை பிக்பாஸ் போட்டுக்காட்டி நியாபகப்படுத்தினார். அப்போது லாஸ்லியா - கவினின் காதல் விவகாரங்கள் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் லாஸ்லியாவின் அப்பா அவரை கடுமையாக கண்டித்தார். மேலும் கவினின் நண்பர் வந்து விளையாட்டில் முனைப்புடன் பங்கேற்குமாறு கன்னத்தில் அறைந்து விட்டு சென்றார்.
அந்த நிகழ்வை பார்த்த கவின் சோகமாக அமர்ந்திருக்கிறார். அதனை பார்க்கும் லாஸ்லியா ஏன் சோகமாக இருக்க என்று கேட்க, அதற்கு கவின், நேற்று கமலிடம், 'யார நம்புறது, யார நம்பக் கூடாதுனு பேசியிருந்த. அதை ஏன் சொன்ன ?, என்ன நம்பலையா? என்று கேட்கிறார்.
அதற்கு பதிலளிக்கும் லாஸ்லியா, 'சேரனப்பா விஷயத்த தான் சொன்னேன். உண்மையா பொய்யானு தெரியல. நான் உன்னை குறிப்பிட்டு அதனை சொல்லவில்லை' என்கிறார்.
BIGG BOSS 3: 'சேரப்பா பத்தி தான் சொன்னேன்' - இதற்காக கவினை சமாதானப்படுத்தும் லாஸ்லியா வீடியோ