இந்த வாரம் நாமினேட் ஆனவர்களுக்காக ஓட்டு கேட்கும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 17, 2019 01:22 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வாரத்துக்கான எவிக்ஷனில் கவின், சேரன், லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முன்னாள் போட்டியாளரான அபிராமி வெங்கடாச்சலம், எபிசோடில் நடக்கும் சம்பவங்கள் குறித்து தனது கருத்துக்களையும், ஆதரவுகளையும் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டின் இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ள ஷெரின் மற்றும் லாஸ்லியாவுக்காக, அபிராமி மக்களிடம் வாக்களிக்க சொல்லி பிரசாரம் செய்துள்ளார். லாஸ்லியாவுக்காக அபிராமி பகிர்ந்துள்ள தனது பதிவில், “என்னுடைய இறுதி வரைக்கும் உன்னுடன் இருப்பேன் என சத்தியம் செய்திருந்தேன். நீ எனது குட்டி தங்கச்சி. லவ் யூ பேபி கேர்ள்..” லாஸ்லியாவுக்கு வாக்களியுங்கள் என தனது ஃபாலோயர்ஸ்களிடம் கேட்டுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து சிறிது இடைவெளிக்கு பின், ஷெரினுக்காக பகிர்ந்த பதிவில், “வாக்களிப்பது உங்களது தனிப்பட்ட விருப்பம். என்னுடையெ நெருங்கிய தோழியும், எனது தங்கையும் இருவரும் நாமினேஷனில் இருக்கும்போது அவர்களுக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறேன். ஷெரின் பிக் பாஸ் இறுதிப்போட்டி வரைக்கும் இருக்க தகுதியானவர். அவருக்கும் வாக்களியுங்கள்” என அபிராமி தெரிவித்துள்ளார்.