‘விடா முயற்சி விஸ்வரூப வெற்றி..’ - பிக் பாஸ் வீட்டில் டிக்கெட் டூ ஃபினாலேவின் திக் திக் Moment

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலேக்கான கடினமான டாஸ்க் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Hotstar Bigg Boss Tamil 3 Ticket To Finale Fitness Promo 3

பிக் பாஸ் வீட்டில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் ஜெயிப்பவர்கள் நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை பெறுவார்கள். அதன்படி தற்போது பிக் பாஸ் வீட்டில் உள்ள சேரன், கவின், தர்ஷன், முகென், ஷெரின், லாஸ்லியா, சாண்டி ஆகியோர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

இன்றைய எபிசோடிற்கான முதல் புரொமோவில், சேரன் தான் தான் பட்டியலில் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்றும், அதற்கான விளக்கத்தையும் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து வெளியான 2வது புரொமோவில், சுய சிந்தனையும், தனித்தன்மையும் இல்லாத நபராக கவினும், லாஸ்லியாவும், மக்களின் அனுதாப அலைக்காக நடிக்கும் பரிதாபங்கள் என கவின் மற்றும் சேரனின் பெயரை தர்ஷன் குறிப்பிட அவர் அதற்கான விளக்கத்தை கேட்டார்.

தற்போது வெளியாகியுள்ள 3வது புரொமோ வீடியோவில், டிக்கெட் டூ ஃபினாலேக்கான கடினமான ஃபிசிக்கல் டாஸ்கில், சாண்டி, தர்ஷன், ஷெரின், சேரன் என அனைவரும் தோல்வியுற, கவின், லாஸ்லியா, முகென் ஆகியோர் போட்டியை விட்டுக் கொடுக்காமல் விளையாடுகின்றனர்.

இறுதிக்கட்டத்தை நெருங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்படைய தொடங்கியுள்ளது. இந்த டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் யார் நேரடியாக இறுதி போட்டிக்குள் செல்லும் வாய்ப்பை பெறுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

‘விடா முயற்சி விஸ்வரூப வெற்றி..’ - பிக் பாஸ் வீட்டில் டிக்கெட் டூ ஃபினாலேவின் திக் திக் MOMENT வீடியோ