‘லாலா வந்தாச்சு... சாண்டி குஷியாச்சு...!!’ - பிக் பாஸ் 3 புரொமோ வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 13, 2019 12:32 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடிற்கான இரண்டாவது புரொமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் Freeze டாஸ்கில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் அவரவர்களை நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சிகளை கொடுத்து வருகின்றனர். இதுவரை முகென், லாஸ்லியா, சேரன், வனிதா, தர்ஷன் ஆகியோரின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தனர்.
அவர்களை தொடர்ந்து இன்றைய எபிசோட்டில், சாண்டி மாஸ்டரின் செல்லக் குழந்தை லாலாவும், சாண்டியின் மனைவியும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் புதிய புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. குழந்தைக்கு விவரம் தெரிய ஆரம்பிக்கும் போது பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததால், பாப்பாவுக்கு தன்னை அடையாளம் தெரியுமா என பல முறை கவலைப்பட்டிருக்கிறார்.
இந்த சூழலில், பிக் பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரியான லாலா, சாண்டியை நோக்கி ஓடி வந்து கிஃப்ட் கொடுத்து கட்டிப்பிடித்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இன்றைய எபிசோடில், அப்பா-மகள் பாசமும், முதல் புரொமோவில் இடம்பெற்ற கவின் மற்றும் அவரது நண்பருடனான நண்பேண்டா மொமெண்ட்டும் ஹைலைட்டாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
‘லாலா வந்தாச்சு... சாண்டி குஷியாச்சு...!!’ - பிக் பாஸ் 3 புரொமோ வீடியோ வீடியோ