'அவகிட்ட பேசுனா நான் டென்சனாய்டுவேன்' - லாஸ்லியா குறித்து சேரனிடம் அவரது மகள் குற்றச்சாட்டு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களாக போட்டியாளர்களின் உறவினர்கள் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று(செப்டம்பர் 12) விஜய் டிவியில் ஒளிபரப்பான முதல் புரோமோவில் தர்ஷனின் அம்மா உள்ளே வந்தார்.

Kavin, Losliya, Vanitha, Cheran, Bigg Boss 3 Promo 3 Sept 12

இரண்டாவது புரோமோவின் வனிதாவின் குழந்தைகள் உள்ளே வந்தனர். மகிழ்ச்சியில் வனிதா அவர்களை ஓடிப் போய் கட்டிப்பிடித்தார். அப்போது பின்னணியில் வாயாடி பெத்த புள்ள பாடல் ஒளிக்கப்பட்டது. அதனை கேட்ட வனிதா, நான் வாயாடியா என்று நக்கலாக கேட்டார்.

தற்போது வெளியான மூன்றாவது புரோமோவில் சேரனின் மகள் உள்ளே வந்திருக்கிறார். அவர் சேரனுடன் தனியாக உரையாடிக்கொண்டிருக்கிறாரர். அப்போது லாஸ்லியா பற்றி பேசும் சேரனின் மகள், ''நீ லாஸ்லியா மேல ரொம்ப கேர் எடுத்துக்கிற. புள்ளைனு சொல்லிட்டா எல்லோரும் புள்ளை ஆகிட முடியுமா ?

முதல் முதல நீ புள்ளனு சொன்ன அப்போ அது உன்ன விட்டுக்கொடுத்து இங்க வந்து சிரிச்சிட்டு இருந்தது. அதுக்கு அப்புறம் சேரன் அப்பானு சொல்றா. நீங்களும் நம்பிட்டு இருக்கீங்க. இதுக்கு மேல அவகிட்ட பேசுனா நான் டென்சனாகிடுவேன்'' என்கிறார்.

'அவகிட்ட பேசுனா நான் டென்சனாய்டுவேன்' - லாஸ்லியா குறித்து சேரனிடம் அவரது மகள் குற்றச்சாட்டு வீடியோ