சூர்யாவின் அன்பான fans ! - காப்பான் 2nd Trailer குறித்த அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கி, சூர்யா நடித்துள்ள படம் 'காப்பான்'. இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Suriya, Mohanlal, Arya's Kaappaan 2nd Trailer today 7PM

இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படம் தெலுங்கில் பந்தோபஸ்த் என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் இரண்டாவது தமிழ் டிரெய்லர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.