''விஜய் அண்ணா மறக்க மாட்டேன்'' - பிகில் டீமுக்கு ஃபோட்டோ மூலம் குட்பை சொன்ன பிரபல ஹீரோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 31, 2019 06:17 PM
'பரியேறும் பெருமாள்' படத்துக்கு கிடைத்த மாபெரும் வரவேற்புக்கு பிறகு கதிர், தளபதி விஜய்யுடன் இணைந்து 'பிகில்' படத்தில் நடித்து வருகிறார். அட்லி இயக்கி வரும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, 'மேயாத மான்' இந்துஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படம் குறித்து நடிகர் கதிர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபோட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், என் மனது பேச விரும்புவதை இந்த புகைப்படம் பேசும். 'பிகில்' படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டேன். விஜய் அண்ணா, உங்கள் அரவணைப்பு எனக்கு மகிழ்ச்சி உணர்வையும், முடிவற்ற அன்பையும் எனக்கு அளித்தது. சிறப்பான தருணங்களுக்கு நன்றி. இதனை உண்மையாக்கிய அட்லி அண்ணாக்கு நன்றி. என்றார்.
This photo speaks what my heart wants to speak!! Completed shooting for #BIGIL ! Ur hug gave me an emotional happiness n unconditional love @actorvijay na! Thank u & Love u so much for all the Best Moments. Thank u na @Atlee_dir @Jagadishbliss for making all these true pic.twitter.com/MvKIMIZnP8
— kathir (@am_kathir) July 31, 2019