இப்போ தளபதி விஜய்யின் 'பிகில்' ஷூட்டிங்கிற்கு தான் போய்ட்டு இருக்கேன் - பிரபல நடிகர் அதிரடி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 31, 2019 01:29 PM
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பாக தளபதி விஜய் ஹீரோவாக நடித்து வரும் படம் 'பிகில்'. இந்த படம் மூலம் 'தெறி', 'மெர்சல்' படத்துக்கு பிறகு அட்லி, தளபதி விஜய்யுடன் இணைந்துள்ளார்.

இந்த படத்தில் நயன்தாரா, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்நிலையில் நடிகர் விவேக் ஒரு விழாவில் தான் பேசும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தளபதி விஜய்யின் பிகில் ஷூட்டிங்கிற்கு தான் போய்ட்டு இருக்கேன். இத கேட்டதும் எவ்வளவு ஆரவாரம் கொடுத்தீங்க. அதே எழுச்சியை தாய் மண்ணுக்காக, மரங்களுக்காக, ஏரிகளுக்காக, குளங்களுக்காக கொடுக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள் என்று தெரிவித்தார்.
பிகில் என்று சொன்னதும் கூட்டத்தின் மகிழ்ச்சி பாருங்கள் pic.twitter.com/9Mg5dkHnjP
— Vivekh actor (@Actor_Vivek) July 30, 2019