‘பட்டாஸ் சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்..’ - தனுஷின் அடுத்தப்படம் தீபவாளி ரிலீஸ்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘பட்டாஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

Dhanush's Pattas will not clash with Thalapathy Vijay's Bigil for Diwali

‘எதிர்நீச்சல்’, ‘கொடி’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு ‘பட்டாஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. சத்ய ஜோதி ஃபில்ம்ஸ் தயாரித்து வரும் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர், தனுஷின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சினேகா நடித்து வருகிறார். ‘புதுப்பேட்டை’ திரைப்படத்திற்கு பின் 13 ஆண்டுகள் கழித்து தனுஷ்-சினேகா ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர். மேலும், மெஹ்ரீன் பிர்சாடா, நவீன் சந்திரா உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். ‘களரி’ கலைக்கு முன்பு இருந்த சோழர்கள் தற்காப்பு கலையை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இதில் மகன் தனுஷின் பெயர் தான் ‘பட்டாஸ்’ என்று கூறப்படுகிறது.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தை வரும் தீபாவாளி பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக நமக்கு கிடைத்த தகவலின்படி, ‘பட்டாஸ்’ திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.