"நா சும்மாவே சீனுடி, இனி ஸ்கூலுக்கு டானுடி" கோமாளி Song இதோ !
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Jul 31, 2019 05:38 PM
‘அடங்கமறு’ திரைப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்துள்ள ‘கோமாளி’ திரைப்படத்தின் ‘ஹாய் சொன்ன போதும்’ பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மேலும், சம்யுக்தா ஹெக்டே, கவிதா ரதேஷ்யம், கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.
டெக்னாலஜியின் வளர்ச்சியும், அதன் பாதிப்புகளையும் நகைச்சுவையாக பேசும் விதமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள இப்படத்தில் இடம்பெற்றுள்ள 90-களின் முக்கிய அம்சமாக திக்ழந்த சில நினைவுகளை தற்போதைய சூழலுடன் இணைத்து பாடல் வரிகள் அமைக்கப்பட்டுள்ளது. பிரதீப் ரங்கநாதன் எழுதிய இந்த பாடலை கிர்ஷ் பாடியுள்ளனர்.
"நா சும்மாவே சீனுடி, இனி ஸ்கூலுக்கு டானுடி" கோமாளி SONG இதோ ! வீடியோ