துப்பாக்கிக்கு பிறகு ஹிந்தியில் ரீமேக்காகும் தளபதி விஜய்யின் 'கத்தி' - ஹீரோ இவரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் 'துப்பாக்கி'. இந்த படம் ஹிந்தியில் 'ஹாலிடே' என்ற பெயரில் ரீமேக்கானது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்த படத்தில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்திருந்தார்.

Akshay Kumar approached for Thalapathy Vijay's role in Kaththi

இதனையடுத்து விஜய் - முருகதாஸ் இணைந்த படம் கத்தி. விவசாயிகளின் பிரச்சனைகளை பேசிய இந்த படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தை பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் விஜய்யின் வேடத்தில் நடிக்க அக்ஷய் குமாரை அனுகியுள்ளனராம். ஆனால் அவரது முடிவை இன்னும்  தெரிவிக்கவில்லையாம். இந்த படத்தை ஜெகன் சக்தி என்பர் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இவர் தற்போது அக்ஷய் குமாரை வைத்து மிஷன் மங்கள் படத்தை இயக்கிவருகிறார்.