“உள்ள போனா ரத்தக்கண்ணீர் ரேஞ்ச் தான்..” - இனி கஸ்தூரியால் களைக்கட்டும் பிக் பாஸ் வீடு!!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 08, 2019 06:32 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் நடிகை கஸ்தூரி சென்றிருக்கும் புதிய புரொமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்தே கஸ்தூரி கலந்துக் கொள்வார் என்ற செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இந்த சீசனிலும் அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வார் என்று அழுத்தமாக கூறப்பட்டு வந்த நிலையில் கஸ்தூரி ஒருவழியாக பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
அதற்கு முன்பாக Behindwoods-ன் Personals வித் தாரா நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரத்யேகமாக அளித்த பேட்டியில் பிக் பாஸ் குழுவினர் நல்ல ஆஃபருடன் தன்னை அணுகியதாகவும், ஒருவேளை போனால் போகலாம் என்றும் ஹின்ட் கொடுத்திருந்தார். அந்த பேட்டியில், பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றால் எப்படி இருக்கும் என்பதை கூறினார்
அவர் பேசுகையில், “பிக் பாஸ் ஷோல நல்லவங்களையே கெட்டவங்களா காட்டுறாங்க.. எல்லா நேரத்துலையும் நல்லவளாவும் இருக்க மாட்டேன், கோவப்படுவேன்.. ஆக என்ன வச்சு செய்யப்போறாங்க நல்லா.. கஸ்தூரி தங்கமாவே உள்ள போனாலும் வெளிய வரப்போ ரத்தக்கண்ணீர் MR ராதா ரேஞ்சில் தான் இருக்கும். அம்க்களுக்கு தெரியும் பிக் பாஸ்ல எப்படி காட்டுறாங்கன்னு. அங்க போனா என்ன அழற மாதிரி காட்ட முடியாது”.
“அதுக்காக வனிதா மாதிரி பயமுறுத்துற ஆளும் இல்ல. என்கிட்ட கத்திட்டே இருந்தா கேட்டுடே இருப்பேன்.. அவங்க ஓஞ்சதும் ஒரே வார்த்தைல நல்லா குத்தி காட்டுற மாதிரி பேசி கத்தியால சொருகிடுவேன். அடிச்சா திருப்பி வாங்கிட்டு போறவளும் கிடையாது, எவ்வளவு அடிச்சாலும் தாங்குறா கேரக்டரும் கிடையாது’.
“எல்லாத்தையும் மீறி இந்த முறை நல்ல ஆஃபர் கொடுத்திருக்காங்க.. எனக்கு இருக்க கொஞ்ச அறிவையும், சமூக பொறுப்புள்ள குடிமகளாக என்னை மக்களிடம் அடையாளப்படுத்திக்கவும் நான் போனா போகலாம்” என்று கூறியுள்ளார்.
“உள்ள போனா ரத்தக்கண்ணீர் ரேஞ்ச் தான்..” - இனி கஸ்தூரியால் களைக்கட்டும் பிக் பாஸ் வீடு!! வீடியோ