“I Love You”: Romance-ல் திளைக்கும் அபி-முகென்..! காதல் கலவரம் Part 2 ரெடி
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 07, 2019 02:13 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சாக்ஷி - லாஸ்லியா-கவினின் காதல் கதையை காட்டி போரடித்துவிட்ட நிலையில், இந்த வாரம் அடுத்த காதல் ஜோடியை பிக் பாஸ் டார்கெட் செய்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் காதலும், காதல் ஜோடிகளும் அதிகமாகவே உள்ளனர். கடந்த சில வாரங்களாக சாக்ஷி - லாஸ்லியா-கவினின் முக்கோண காதல் கதையின் ரீல் அறுந்து, பார்வையாளர்கள் மட்டுமின்றி ஹவுஸ்மேட்ஸே போதுமடா சாமி என்ற அளவிற்கு படம் காட்டிவிட்டனர்.
தற்போது புதுவிதமான காதல் கதை உதயமாகியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் முகென் மீது அபிராமிக்கு காதல் மயக்கம் இருப்பதை அவரே வெளிப்படையாக தெரிவித்திருந்தார். தனக்கு வெளியே ஒரு காதல் இருப்பதாக முகென் கூறியும் நீ என் காதலை ஏற்காவிட்டாலும் நான் உன்னை காதலிப்பேன் என்று அபிராமி கூறி வந்தார்.
இந்நிலையில், இன்றைய எபிசோடிற்கான முதல் புரொமோவில் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் அடித்து பிடித்து விளையாட்டில் தீவிரமாகினர். அதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள 2வது புரொமோவில் அபிராமி வெளிப்படையாக தனது காதலை முகெனுக்கு தெரிவிக்கிறார். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் கேப்டனான முகென் அபிராமியின் புரொபோசலை மறுபடியும் தட்டிக் கழிக்கிறார்.
புரொமோ வீடியோவில், “I Love You.. இதுக்கு என்ன சொல்றது தெரியல.. நான் உன்ன காதலிக்கிறேன். நீ என்ன காதலின்னு சொல்லல” என்று அபிராமி தனது நிறைவேறாத உன்னதமான ஒருதலை காதலை முகெனிடம் வெளிப்படுத்துகிறார்.
ஏற்கனவே முகெனுடன் காக்ஷி பேசுவதை விரும்பாத அபி, மீண்டும் Possessive விளையாட்டை ஆரம்பிப்பாரா, அல்லது தனது ஒருதலை காதலுடன் பிக் பாஸ் வீட்டில் உலா வருவாரா என்படை பொறுத்திருந்து பார்க்கலாம்.
“I LOVE YOU”: ROMANCE-ல் திளைக்கும் அபி-முகென்..! காதல் கலவரம் PART 2 ரெடி வீடியோ