பிக்பாஸ் வீட்டுக்குள்ள கஸ்தூரி - வைல்டு கார்டு என்ட்ரியா ?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 08, 2019 10:37 AM
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் அடுத்தடுத்து ரேஷ்மா, சரவணன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினர். அதனால் பிக்பாஸ் வீட்டில் தற்போது 11 பேர் மட்டுமே உள்ளனர்.

பிக்பாஸ் கடந்த இரு சீசன்களிலும், ஹரிஷ் கல்யாண், பிந்து மாதவி, சுஜா வருணி, விஜயலக்ஷ்மி என ஒவ்வொரு வரும் கலந்து கொண்டு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தனர்.
இந்நிலையில் இந்த சீசனில் நடிகை கஸ்தூரி கலந்து கொள்ள விருப்பதாக தகவல் வெளியான வண்ணம் இருந்தன. அதனை தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக மறுத்தார். மேலும் Behindwoods TVக்கு அவர் பிரத்யேகமாக அளித்த பேட்டியிலும் அவர் அந்த செய்திகளில் உண்மையில்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று ( ஆகஸ்ட் 8 ) அன்று வெளியான புரோமோவில் பிக்பாஸ் வீட்டுக்குள் கஸ்தூரி இருக்கிறார். எல்லோரையும் நலம் விசாரிக்கும் கஸ்தூரி, சாக்ஷியிடம் மட்டும், உங்களிடம் கேட்க எனக்கு சில கேள்விகள் இருக்கு என்கிறார்.
கஸ்தூரி வைல்டு கார்டு என்ட்ரி மூலம் போட்டியாளராக உள்ளே நுழைகிறாரா அல்லது இன்று ஒரு நாள் கெஸ்ட்டாக உள்ளே நுழைகிறாரா என்பது இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தெரிந்துவிடும்.
தற்போது வெளியான புரோமோவில் மீரா விவாகரத்தை நியாபகப்படுத்தும் விதமாக சேரனை அதான் கைய அப்படி வைச்சிருக்கீங்களா என்று சேரனை கலாய்த்தார்.
பிக்பாஸ் வீட்டுக்குள்ள கஸ்தூரி - வைல்டு கார்டு என்ட்ரியா ? வீடியோ