Pakka - காஜல் அகர்வாலின் ‘இந்தியன் 2’ ஷூட்டிங் Plan
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 07, 2019 05:33 PM
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் ஹீரோயினான காஜல் அகர்வாலின் ஷூட்டிங் பிளான் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.
கடந்த 1996ம் ஆம் ஆண்டு ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹீட்டானது. இந்நிலையில், சுமார் 23 ஆண்டுகளுக்கு பின் இப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘இந்தியன் 2’ உருவாகி வருகிறது. கமல்ஹாசன், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், நெடுமுடி வேணு உள்ளிட்டோர் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை பிரம்மாண்ட பொருட் செலவில் லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில், நடிகை பிரியா பவானி ஷங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் ப்ரீத், நடிகர்கள் வித்யூத் ஜாம்வால், சித்தார்த் உள்ளிட்டோரும் இப்படத்தில் இணைந்துள்ளனர். வரும் ஆக.12ம் தேதி ‘இந்தியன் 2’ படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கவிருப்பதாகவும், இந்த ஷெடியூலில் சித்தார்த் மற்றும் பிரியா பவானி ஷங்கரின் காட்சிகள் படமாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் விசாகப்பட்டினம், ஹைதராபாத்தில் நடைபெறவிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்காக இயக்குநர் ஷங்கர் தனது குழுவுடன் ஆந்திராவில் லொகேஷன் தேடும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால், ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகளை வரும் நவம்பர் மாதம் தொடங்குவார் என நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
தற்போது நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் தமிழில் ஜெயம் ரவியின் ‘கோமாளி’, தெலுங்கில் ஷர்வானந்தின் ‘ரணரங்கம்’ ஆகிய திரைப்படங்கள் வரும் ஆக.15ம் தேதி ரிலீசாகிறது. இதையடுத்து, புதிய திரைப்படம் ஒன்றுக்காக கேரளாவின் சிறப்புமிக்க தற்காப்பு கலைகளில் ஒன்றான களரிபயட்டு கலையை கற்று வருவது குறிப்பிடத்தக்கது.