"ஏதோ தப்பா இருக்கு.." சரவணனின் Eviction-ஐ முன்பே யூகித்த சாண்டி! - அது தான் பா சித்தப்பு Love!!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 07, 2019 12:09 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து சரவணன் வெளியேற்றப்படுவதை முன்கூட்டியே சாண்டி கணித்தது பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மீரா மற்றும் சேரன் இடையேயான விவகாரத்தில் Volunteer-ஆக வந்து சரவணன் மாட்டிக் கொண்டார். கமல்ஹாசன் பங்கேற்ற நிகழ்ச்சியில் கல்லூரி காலங்களில் பெண்களை உரசுவதற்காக பேருந்தில் பயணித்திருக்கிறேன் என சரவணன் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்த அதன் விளைவாக அவர் அதிரடியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
சரவணின் எதிர்பாராத எவிக்சன் ஹவுஸ்மேட்ஸ் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்த, லிவிங் ஏரியாவிற்கு பிக் பாஸ் அழைத்ததுமே சரவணின் எலிமினேஷனை சாண்டி யூகித்துவிட்டார். ‘ஏதோ ஒன்று தப்பா இருக்கு.. என்று கூறிக் கொண்டிருக்கையில் பிக் பாஸ் சரவணன் வெளியேறிய செய்தியை தெரிவித்தார். இது ஹவுஸ்மேட்ஸ் பலருக்கும் அதிர்ச்சியளிக்க சாண்டியும், கவினும் சித்தப்புவின் பிரிவை தாங்க முடியாது கதறி அழுதனர்.
சரவணன் வெளியேறியது அதிர்ச்சியளித்தாலும், அதற்கான காரணம் புரியாமல் ஹவுஸ்மேட்ஸ் அவரது குடும்பத்தினருக்கு ஏதேனும் ஆகிவிட்டதா எனபன போன்ற பல சிந்தனைகளுக்கு ஆளாகினர். அதையடுத்து, பிக் பாஸ் அனைவரிடம் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் அவர் வெளியேற வேண்டிய கட்டாயம் மற்றபடி சரவணனும், அவரது குடும்பத்தினரும் நலமுடன் இருப்பதாகவும், இது குறித்து சனிக்கிழமை எபிசோடில் தெரிய வரும் என்றும் பிக் பாஸ் கூறினார்.
சரவணின் எவிக்சன் பிக் பாஸ் வீட்டில் சாண்டி மற்றும் கவினுக்கு பேரிடி என்று தான் சொல்ல வேண்டும். இருவரும் அவரை மிஸ் பண்ணுவதாக Friendship டாஸ்கிலும் தெரிவித்தனர்.
"ஏதோ தப்பா இருக்கு.." சரவணனின் EVICTION-ஐ முன்பே யூகித்த சாண்டி! - அது தான் பா சித்தப்பு LOVE!! வீடியோ